வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

புருஷனை போல மகனுக்கும் இரண்டாம் தாரமா.? பாக்கியா எடுக்கும் அதிரடி முடிவு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கோபி ஒரு வழியாக இப்போது தான் ராதிகாவை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி உள்ளார். இதைத்தொடர்ந்து இப்போது மற்றொரு பிரச்சனை பாக்கியலட்சுமி தொடரில் பூதாகரமாக வெடித்துள்ளது.

அதாவது எழில் அமிர்தாவை காதலித்து வருகிறார். இந்த விஷயம் செழியன் மூலமாக எழிலின் பாட்டிக்கு தெரிய வர நேரடியாக அமிர்தா வீட்டுக்கே சென்று என் பேரனை வளைத்து போட பார்க்கிறீர்களா என கண்டபடி பேசி விட்டார். இதனால் அமர்தா குடும்பம் சொல்லிக் கொள்ளாமல் அங்கிருந்த கிளம்பி விட்டனர்.

Also Read : திட்டம் போட்டு எலிமினேஷனை நடத்தும் விஜய் டிவி.. பிக் பாஸில் போடும் ஓட்டு எல்லாமே வேஸ்ட் தானா?

இதனால் எழில் உச்சகட்ட மனவேதனை அடைந்துள்ளார். இந்த விஷயத்தை தனது அம்மாவிடம் சொல்லி அழுகிறார். ஏற்கனவே பாக்யா தனது புருஷன் கோபி திருமணமான ராதிகாவை குழந்தையுடன் இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்டார் என்ற மனவேதனையில் உள்ளார். இப்போது அதே நிலைமை மகனுக்கும் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே திருமணம் ஆகி கணவனை இழந்த அமிர்தா கைக்குழந்தையுடன் உள்ளார். அதனால் தான் எழிலின் பாட்டி ஈஸ்வரி அமிர்தாவை ஊரைவிட்டே விரட்டி உள்ளார். ஆனால் எழில் அமிர்தாவை தேடி கண்டுபிடித்து விட்டார். ஒருவருக்கொருவர் காதலை பரிமாறிக் கொள்கிறார்கள்.

Also Read : பெரிய பணக்காரரை வளைத்து போட்ட விஜய் டிவியின் முக்கிய பிரபலம்.. சத்தமில்லாமல் செய்யப்போகும் 2வது திருமணம்

உடனே எழில் தனது அம்மா பாக்யாவிற்கு போன் செய்து அமிர்தாவை பேச வைக்கிறார். அப்போது பாக்யாவிடம் எழிலை எனக்கு பிடிக்கும், உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும், உங்க குடும்பத்தை பிடிக்கும் ஆனால் இந்த வாழ்க்கைக்கு நான் ஆசைப்படலாமா, தகுதியானவளா என்ற எண்ணம் இருந்ததாக அமிர்தா கூறுகிறார்.

பாக்கியா தனது மாமனார், மாமியாரை மீறி அமிர்தாவுக்கு தைரியமாக இரு என்று ஆறுதல் கூறுகிறார். இதனால் எந்த பிரச்சனை வந்தாலும் அதை சமாளித்து எழிலுக்கு அமிர்தாவை திருமணம் செய்து வைப்பதில் பாக்யா உறுதியாக உள்ளார். ஆகையால் வரும் வாரங்களில் பாக்கியலட்சுமி தொடர் மிகவும் சுவாரசியமாக ஒளிபரப்பாக இருக்கிறது.

Also Read : டிஆர்பி-யில் பின்னுக்குத் தள்ளப்பட்ட விஜய் டிவியின் டாப் சீரியல்கள்.. அசுரத்தனமான வேகம் காட்டிய சன் டிவி

Trending News