வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

நடிக்க கூப்பிடுவாங்கனு பிளான் போட்டா, எல்லாரும் அதுக்கே கூப்பிடறாங்க.. தமன்னா டென்சன்

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற பாடல் காவாலியா. இந்த பாடல் மிகப்பெரிய ஹிட்.

ஜெயிலர் ஹிட்டாவதற்கும் இப்பாடல் முக்கிய காரணம். அதிலும் தமன்னா கவர்ச்சியுடன் ஆடிய இப்பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஹிட்டு. புரமோசனில் கூட அவரே இப்பாடலை ரசிகர்கள் முன்பு நடனம் ஆடினார்.

காவாலியா பாடலுக்கு சமூக வலைதளங்களில் எல்லோரும் ரீல்ஸ் வெளியிட்டனர். சினிமா நட்சத்திரங்களும்தான். இப்படமும் சூப்பர் ஹிட்டாகி ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்தது.

பாலிவுட்டில் இருந்து தொடர்ந்து வரும் அழைப்புகள் – தமன்னா அப்செட்

தமன்னாவுக்கு காவாலியா பாடலுக்கு நடனம் ஆடிய மாதிரி, இந்தியில் ஸ்திரி – 2 படத்தில் இயக்குனர் நண்பர் என்பதற்காக தமன்னா ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார்.

இதைப் பார்த்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களில் அதேபோல் நடனமாடச் சொல்லி பாலிவுட்டில் இருந்து அழைப்பதாக தமன்னா தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வரும் என்ற நினைத்த தமன்னாவுக்கு குத்து பாடலுக்கு டான்ஸ் ஆடச் சொல்லி அழைப்புகள் வருகிறது. இதனால் அவர் வருத்தத்தில் இருப்பதாக தகவல் வெளியாகிறது.

Trending News