திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

இந்தியளவில் அதிக அவார்டுகளை குவித்த ஜாம்பவான்.. கமல் போல் அவார்டுகள் வேண்டாம் என அறிவித்த ஹீரோ

இந்திய சினிமாவில் பல்வேறு கதாபாத்திரங்களில் தனது பங்களிப்பின் மூலம் புகழின் உச்சியை தொட்டவர் தான் உலகநாயகன் கமலஹாசன். தற்பொழுது இவர் சினிமாவில் அடுத்து வரும் இளம் நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று ஒரு அதிரடியான முடிவினை எடுத்துள்ளார். அதிலும் கமலை போலவே பாலிவுட்டில் ஜாம்பவானாக இருக்கக்கூடிய நடிகர் ஒருவரும் பின்பற்றி வருகிறார்.

இதனைத் தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தனது சிறந்த நடிப்பின் மூலம் பல்வேறு விருதுகளையும், அவார்டுகளையும் வாங்கி குவித்துள்ளார் கமலஹாசன். ஒரு காலகட்டத்திற்குப் பிறகு நான் போதுமான அளவு விருதுகளை வாங்கி விட்டேன், இனி மேல் எனக்கு விருதுகள் வழங்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.

Also Read: நேரம் சரியில்லாத 3 பேரை தூக்கிவிடும் கமல்.. விக்னேஷ் சிவனுக்காக உலகநாயகன் எடுக்கும் ரிஸ்க்

அதனால் அடுத்து வரும் தலைமுறைக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று விருது வழங்கும் கமிட்டிக்கே கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார். இதனை அடுத்து பாலிவுட்டில் ஜாம்பவானாக இருக்கக்கூடிய அமிதாப்பச்சன் அவர்களும், கமலஹாசன் போலவே எக்கச்சக்க விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து 1969 ஆம் ஆண்டு வெளியான “சாட்ஹிந்துஸ்தானி” என்னும் படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். தனது அபார வளர்ச்சியின் மூலம் பல்வேறு விருதுகளையும் வாங்கியுள்ளார். அதிலும் பெஸ்ட் ஆக்டர்காக 15 முறையும், பெஸ்ட் சப்போட்டிங் ஆக்டர்காக 15 முறையும், இந்திய கௌரவ விருதினை 9 முறையும் பெற்றுள்ளார்.

Also Read: புதுசா தமிழ் சினிமாவுக்கு கிடைத்த 5 கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்கள்.. ரீ என்ட்ரியில் பிச்சு உதறும் கமல் நண்பர்

இது போக இந்திய அரசாங்கம் இவரை கௌரவித்து பல விருதுகளையும் வழங்கியுள்ளது. அதிலும் 2018 ஆம் ஆண்டு திரைத்துறையில் மிக உயரிய பங்களிப்பை வழங்கியதற்காக, வாழ்நாள் சாதனையாளருக்கான தாதா சாகேப் பால்கே விருதும் வழங்கப்பட்டது. இப்படியாக இவர் வாங்கிய விருதுகளை மட்டும் அடுக்கிக் கொண்டே போகலாம். 

அந்த அளவிற்கு பாலிவுட் சினிமாவில் ஜாம்பவான் ஆகவே திகழ்ந்து வந்தார். தற்பொழுது உலகநாயகன் கமலஹாசனை போலவே அமிதாப்பச்சன் அவர்களும் அதிரடியான முடிவினை எடுத்துள்ளார். இளம் நடிகர்களை தேர்ந்தெடுத்து விருதுகளை வழங்குங்கள், இனிமேல் எனக்கு விருதுகளும், அவார்டுகளும் வழங்க வேண்டாம் என்று கூறியுள்ளாராம்.

Also Read: 3 ஜாம்பவான்கள் நடித்த ஒரே படம்.. அமிதாப்பச்சனுடன் ரஜினி, கமல் செய்த மகத்தான சாதனை

Trending News