வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ரோலக்ஸ் போல தளபதி 67 இல் ஒரு கெஸ்ட் ரோல்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லோகேஷ்

லோகேஷ் கனகராஜ் ரசிகர்களை கவரும் விதமாக தொடர்ந்து படங்களை எடுத்து வருகிறார். அந்த வகையில் கைதி, மாஸ்டர் படங்களை தொடர்ந்து கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் மூலம் பிளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்தார். இப்போது விஜய்யை வைத்து தளபதி 67 படத்தை எடுக்கப் போகிறார்.

இந்த படத்தில் சஞ்சய் தத், மன்சூர் அலிகான், விஷால், நிவின் பாலி போன்றோர் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு படத்தில் 6,7 வில்லன்கள் என்று சொன்னவுடனே ரசிகர்களுக்கு மிகப்பெரிய பரபரப்பை தளபதி 67 படம் ஏற்படுத்தியுள்ளது.

Also Read : மணிரத்னத்தை மிஞ்சும் அளவிற்கு கதையை செதுக்கி உள்ள லோகேஷ்.. தளபதி 67-ல் விஜய் செய்யப் போகும் சம்பவம்

இது தவிர இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் முக்கிய பிரபலம் ஒருவர் வர உள்ளாராம். ஏற்கனவே விக்ரம் படத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை லோகேஷ் மறைத்து வைத்திருந்தார். எப்படியோ அதை ரசிகர்கள் கண்டுபிடித்து விட்டனர்.

ஆகையால் விக்ரம் படத்தின் டீசரில் சூர்யா இடம்பெற்றிருந்தார். இப்போது அதேபோல் தளபதி 67 படத்தில் கெஸ்ட் ரோலில் கமல்ஹாசன் வர உள்ளாராம். ஏனென்றால் தனக்கு மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் லோகேஷ் என்பதால் அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்தப் படத்தில் கமல் நடிக்கவிருக்கிறாராம்.

Also Read : நடிப்பிலும் ஒரு கை பார்க்கப்போகும் லோகேஷ் கனகராஜ்.. வெளிவந்த சிம்பு பட அப்டேட்

இதில் விக்ரம் கதாபாத்திரத்திலேயே வருகிறாரா அல்லது வேறு கேரக்டரில் வருகிறாரா என்பது தெரியவில்லை. இப்போது இந்த படத்தின் பரபரப்பு அதிகமாகி எப்போது திரைக்கு வரும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் வேறு என்ன புதுமைகள் செய்யப் போகிறார் லோகேஷ் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. டிசம்பர் மாதம் தளபதி 67 படத்திற்கான படப்பிடிப்பு தொடங்க உள்ளதால் விரைவில் இந்தப் படம் குறித்து அப்டேட் வெளியாக வாய்ப்பு இருக்கிறது.

Also Read : 60 வயசுல இப்படி ஒரு எனர்ஜியா? லோகேஷ் போட்ட ஒரே கண்டிஷனால் வெறிபிடித்து அழையும் மன்சூர் அலிகான்

Trending News