வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சிம்புவை போல் விஷால் தேடும் ஆதரவு.. ரொம்பவும் ஊறிப்போன அரசியல் ஆசை

விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் லத்தி திரைப்படம் இந்த வாரம் வெளியாக இருக்கிறது. அதற்கான பிரமோஷனில் படு பிசியாக இருக்கும் விஷால் அவ்வப்போது ஏதாவது ஒரு லூஸ் டாக் விட்டு சர்ச்சையில் சிக்கி கொள்கிறார். அந்த வகையில் இவர் தற்போது தன்னுடைய அரசியல் ஆசைக்காக சில வேலைகளை பார்த்து வருவதாக திரையுலகில் சலசலக்கப்பட்டு வருகிறது.

நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என்று வலம் வரும் விஷால் கடந்த 2017 ஆம் ஆண்டு அரசியலுக்கு வரும் ஆசையில் சுயேட்சையாக ஒரு தொகுதியில் போட்டியிட மனு கொடுத்திருந்தார். ஆனால் அவருடைய போதாத நேரம் அது நிராகரிக்கப்பட்டு விட்டது. அதிலிருந்தே அவர் எப்படியாவது அரசியலில் இறங்கி விட வேண்டும் என்று பல முயற்சிகள் எடுத்து வருகிறார்.

Also read: எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றிய தில் ராஜ்.. விஜய் கூட கட்டுப்படுத்தாத பரிதாபம்

அதற்காகவே அவர் தன்னுடைய நற்பணி மன்றம் மூலம் மக்களுக்கு பல உதவிகளை செய்து வந்தார். சமீபத்தில் கூட ஏழை ஜோடிகளுக்கு இவர் இலவச திருமணம் செய்து வைத்தார். இன்னிலையில் சமீப நாட்களாக பலரும் இவரை புரட்சி தளபதி என்று அழைத்து வருகின்றனர். இந்த அடைமொழியை அவருக்கு யார் வைத்தார்கள் என்று தெரியவில்லை.

இவ்வாறு ரசிகர்கள் ஆர்ப்பரிக்கும் போதெல்லாம் அவர் நான் புரட்சித் தளபதி இல்லை வெறும் தளபதி மட்டும் தான் என வீர வசனம் எல்லாம் பேசுகிறார். இதன் மூலம் அவர் தன்னை விஜய் ரசிகனாக காட்டிக் கொள்ள முயல்கிறார். ஒரு காலத்தில் இப்படித்தான் சிம்பு தன்னை அஜித் ரசிகராக காட்டிக் கொண்டார்.

Also read: எப்படி பார்த்தாலும் வாரிசை அடக்க பார்க்கும் துணிவு.. கவுண்டவுன் பார்த்து ஒன்னுமே பண்ண முடியல என வருந்தும் விஜய்

அதன் மூலம் அவருக்கு சோஷியல் மீடியாவில் நிறைய ஆதரவு கிடைத்தது. மேலும் அஜித் ரசிகர்களும் அவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தனர். அதனாலேயே அவருக்கு அதிக பேரும், புகழும் கிடைத்தது. தற்போது அதே பாணியை தான் விஷாலும் பின்பற்றி வருகிறார். எல்லாம் அடுத்த வருடம் வரும் தேர்தலுக்காக தான். அதனால்தான் அவர் தன்னை ஒரு விஜய் ரசிகராக காட்டிக் கொண்டுள்ளார்.

இதன் மூலம் அவருக்கு விஜய் ரசிகர்களின் ஆதரவும் கிடைக்கும் என்பதுதான் அவருடைய திட்டம். ஏற்கனவே இவர் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க மறுத்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதனால் விஜய் ரசிகர்களும் இவரின் மேல் தீராத கடுப்பில் இருந்தனர். அதை சமாதானம் செய்யும் பொருட்டு இவர் இப்போது தான் ஒரு விஜய் ரசிகன் என்றும், அவரை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்றும் அளந்து விட்டுக் கொண்டிருக்கிறார்.

Also read: எல்லாமே விஜய் கொடுத்த தைரியம்.. படத்தின் பிரமோஷனுக்காக இவ்வளவு மட்டமாவா செய்வீங்க!

Trending News