ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பிக் பாஸ் பிரதீப்புக்கு இப்படி ஒரு பிரச்சனையா?. SJ சூர்யாவுக்கு இருக்கும் அதே விசித்திரமான மனநோய்

SJ Suriya, Pradeep: எப்போதும் இல்லாத படி இந்த முறை பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கிய உடனே சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. முதல் நாளிலிருந்து பிரச்சனை வெடிக்க தினமும் ஒவ்வொரு புதிய சண்டை அரங்கேறி வருகிறது. அதிலும் பிரதிப்புக்கு ஆரம்பம் முதலே ஹைட்டர்ஸ் அதிகமாகி விட்டனர்.

முந்தைய சீசனில் பங்குபெற்ற அசீமை பிரதீப் பின்பற்றி வருகிறார் என்று ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. மேலும் ஓவர் ஆட்டிட்யூட் காட்டும் பிரதீப் தனக்கு ஒரு விதமான மனநோய் இருப்பதாக நேற்றைய எபிசோடில் கூறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அதாவது பாப்புலாரிட்டி யாருக்கு அதிகமாக இருக்கிறது என ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது.

Also Read : பிக் பாஸ் மேடையை அசிங்கப்படுத்திய போட்டியாளர்.. கவினை அடிச்ச அளவுக்கு உனக்கு அறிவு பத்தல தம்பி

அப்போது பேசிய பிரதீப் தான் பிக் பாஸ்க்கு வருவதற்கு முன்பாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்தை டீஆக்டிவேட் செய்து வந்ததாக கூறியிருந்தார். மேலும் தனக்கு பிரண்ட் ரெக்வெஸ்ட் கொடுப்பவர்களுக்கு டிஸ்களைன் கொடுத்தால் தான் தனக்கு நிம்மதியாக இருக்கும் என பிரதீப் கூறியிருக்கிறார்.

அதாவது அவருக்கு ஓசிடி என்ற மனநோய் பிரச்சனை இருக்கிறதாம். எதன் மேலும் நம்பிக்கை இல்லாமல் ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப செய்ய சொல்வது தான் ஓசிடி. சமீபத்தில் எஸ் ஜே சூர்யாவுக்கும் இதே பிரச்சனை இருப்பது தெரிய வந்தது. மார்க் ஆண்டனி படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் சக்கை போடு போட்டது.

Also Read : 4வது நாளே போட்டியாளர்களை வச்சு பிதுக்கும் பிக் பாஸ் 7.. மேக்கப் இல்லன்னா இவங்க மூஞ்ச பார்க்கவே முடியாதே குருநாதா

அப்போது விஷால் பேசுகையில் எஸ் ஜே சூர்யாவுக்கு ஓசிடி பிரச்சனை இருப்பதாக கூறியிருந்தார். அதாவது புதிய கிளாஸ் ஒன்றை அவரது உதவியாளர் எடுத்து வரும்போது திரும்பத் திரும்ப கழுவ சொல்லி உள்ளாராம். ஒரு கட்டத்திற்கு மேல் அவர் மீது நம்பிக்கை இல்லாததால் தனது கண் முன்னால் அந்த கிளாஸை கழுவ சொல்லி இருக்கிறார்.

இப்போது எஸ்ஜே சூர்யா போல் பிரதீப்புக்கும் இந்த நோய் இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் சாதாரணமாகவே சண்டை வெடிக்கும் நிலையில் பிரதீப் இதை சமாளித்து எத்தனை நாள் அங்கு தாக்கு பிடிப்பார் என்பது கேள்விக்குறிதான். மேலும் மற்ற போட்டியாளர்களுடன் உடன் பிரதீப் இப்போதே கொஞ்சம் விலகி தான் இருக்கிறார்.

Also Read : 7 பேரில் இந்த வாரம் வெளியேறப் போகும் பிக் பாஸ் போட்டியாளர்.. சுத்தி சுத்தி செய்யும் மட்டமான வேலை

Trending News