செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

தலைவர் படம்னா குத்தாட்டம் கண்டிப்பா வேணும்.. ஜெயிலர் தமன்னாவை மிஞ்ச வரும் வேட்டையன் நடிகை

Rajini in Vettaiyan: கடந்தாண்டு ரஜினிக்கு ஜெயிலர் படம் மாபெரும் வெற்றியை கொடுத்து வசூல் மன்னன் என்கிற பட்டத்தையும் வாங்கி கொடுத்து விட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தூத்துக்குடியில் நடைபெற்று வருகிறது. இப்படம் டிஎஸ்பி கதையை மையமாக வைத்து உருவாகி வருகிறது.

அத்துடன் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஏற்கனவே வெளிவந்த ஜெய் பீம் படம் மக்களிடம் பல பாராட்டுகளை வாங்கி கொடுத்து ஒரு மிகச்சிறந்த படம் என்கிற அளவிற்கு பெயர் வாங்கி இருக்கிறது. அதே மாதிரி இப்படமும் ரஜினியின் கேரியரில் பெஸ்ட் ஆப் தி மூவி என்று சொல்லும் அளவிற்கு கருத்துள்ள படமாக இருக்கப் போகிறது.

மேலும் தற்போது உள்ள படங்கள் வன்முறையையும் அதிக சண்டை காட்சிகளை வைத்து பார்க்கும் பொழுதே நெஞ்சை பதற வைக்கும் அளவிற்கு காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதற்கு மத்தியில் தற்போது ரஜினி கொஞ்சம் வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து நடிப்பது அனைத்து ரசிகர்களும் பாராட்டத்தக்க விஷயமாக இருக்கிறது.

Also read: தாய் முதல் தாரம் வரை.. ரஜினிகாந்த் மற்றும் விஜயகாந்த் வாழ்வில் நிகழ்ந்த கோஇன்சிடன்ஸ்

இதனைத் தொடர்ந்து இன்னொரு விஷயம் தற்போது உள்ள படங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது படம் வெளிவருவதற்கு முன்னாடியே அந்த படத்தில் உள்ள ஒரு பாடலை தூக்கலாக காட்டிவிட்டு மக்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறது. அந்த வகையில் ஜெயிலர் படத்தில் தமன்னா குத்தாட்டம் ஆகிய காவலா சாங் அனைத்து பக்கங்களிலும் பறந்தது.

அதேபோல வேட்டையன் படத்திலும் ஒரு குத்தாட்டம் வேண்டும் என்பதற்காக தமன்னாவை மிஞ்சும் அளவிற்கு ஒரு நடிகை கமிட் ஆயிருக்கிறார். இவர் ஆர்யா படத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மா என்ற கேரக்டரில் நடித்த துஷாரா விஜயன். இதனைத் தொடர்ந்து நட்சத்திரம் நகர்கிறது, கழுவேத்தி மூர்க்கன், அநீதி போன்ற படங்களில் இவருடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி பிரபலமாகிவிட்டார்.

இதன் மூலம் தற்போது வேட்டையன் படத்தில் ஒரு பாடலுக்கு சும்மா இறங்கி தாறுமாறாக குத்தாட்டம் போடப் போகிறார். இப்பொழுது மார்க்கெட்டில் இதுதான் மிகப்பெரிய ட்ரெண்டாகி வருகிறது என்பதால் இதையே கையில் எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு பண்ணி விட்டார். எந்த அளவிற்கு இந்த பாடல் இவருக்கு கை கொடுக்கப் போகிறது என்பது பாடல் வெளியாகும் போது தெரிந்து கொள்ளலாம்.

Also read: கேப்டனுக்கு அஞ்சலி செலுத்த ஓடோடி வந்த 15 பிரபலங்கள்.. உயிர் நண்பனை பிரிந்து தவிக்கும் ரஜினி

Trending News