வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

அப்பனைப் போல பிள்ளைக்கும் ரெண்டு தாரம் போல.. சீரியலில் என்ட்ரி கொடுத்த சக்காளத்தி

விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் விவாகரத்திற்கு பிறகு கேட்டரிங் தொழிலை விரிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் திருமண மண்டபத்தில் இருக்கும் சமையல் ஆர்டரை எடுக்க வேண்டும் என்பதற்காக, பெரிய நிறுவனத்திடம் இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணி தேர்வான பாக்யாவிற்கு ஒரு ஆர்டர் வழங்கப்படுகிறது.

அது கோபியின் கல்யாண ஆடர் தான் எனத் தெரியாத பாக்யா, எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற வேண்டும் என ஜெனி உடன் இணைந்து அகப்பக்கம் பெண்களின் உதவியுடன் இந்த ஆர்டரை சிறப்பாக செய்து முடிக்க நினைக்கிறார்.

Also Read: பிக் பாஸ் சீசன் 6ல் களமிறங்கும் விஜய் டிவி சீரியல் நடிகை.. கொளுத்திப் போட தயாரான கமல்

மறுப்பக்கம் கோபி ராதிகாவின் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்காக பத்திரிக்கை அடித்து,  கல்யாண ஷாப்பிங் செய்வது என அனைத்து வேலைகளும் தடபுடலாக நடக்கிறது. இதற்கிடையில் இனியாவிற்கும் புது துணி எடுக்க வேண்டும் என கோபி சொன்னதும், ராதிகாவும் அதன்படி செய்கிறார்.

ஆனால் ராதிகாவின் அம்மாவிற்கு இதில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. ஏனென்றால் கோபியை பாக்யாவின் குடும்பத்துடன் ஒட்ட விடாமல் செய்ய வேண்டும். அப்போதுதான் ராதிகாவின் வாழ்க்கை நன்றாக இருக்கும் என ராதிகாவிற்கு ஏற்றி விடுகிறார்.

Also Read: பிக் பாஸ் சீசன் 6 கன்ஃபார்மான 9 ஆண் போட்டியாளர்கள்.. ஆண்டவரை சந்திக்க தயாராகும் போட்டியாளர்கள்

இந்நிலையில் எழில் புதிதாக எடுக்கும் படத்தின் தயாரிப்பாளருக்கு அந்த கதையை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் அப்படி செய்தால் கதையில் இருக்கும் சுவாரசியம் கெட்டுவிடும் என்று நினைக்கிறார் எழில். இதனால் தயாரிப்பாளரும் படத்தை தயாரிக்க விரும்பவில்லை என்று சொல்லும் அளவுக்கு வந்து விடுகிறார்.

அப்போது தயாரிப்பாளரின் மகள் வர்ஷினி புதிதாக பாக்கியலட்சுமி சீரியலுக்கு என்ட்ரி கொடுக்கிறார். வர்ஷினி ஏற்கனவே எழிலில் தோழி, ஆனால் அதை அவருடைய அப்பா முன்பு வெளிப்படுத்தாத எழில் தன்னுடைய கதையை மாற்ற விரும்பவில்லை என்று அழுத்தமாகக் கூறி விடுகிறார்.

Also Read: எதிரிக்கு கூட இந்த நிலைமை வரக்கூடாது.. மிகப்பெரிய சவாலை சந்திக்க போகும் பாக்கியா

பிறகு வர்ஷினி எழிலுக்காக தன்னுடைய அப்பாவிடம் பரிந்து பேசுகிறார். ஏற்கனவே எழில் அமிர்தாவை காதலித்துக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது வர்ஷாவின் என்ட்ரி அமிர்தா-எழில் காதலுக்கு இடையே ஏதாவது பிரச்சினை வர வாய்ப்பு இருக்கிறது. அப்பனை போல பிள்ளைக்கும் ஒன்றல்ல இரண்டு பேரைத் திருமணம் செய்து கொள்ளும் ராசி இருக்கும் போல என்ற நெட்டிசன்கள் எழிலை கோபியுடன் ஒப்பிட்டு கிண்டல் செய்கின்றனர்

Trending News