சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

யோகி பாபுக்கு தயாராகும் ரெட் கார்ட்.. வடிவேலுக்கு போட்டியாக அடுத்த வாரிசு ரெடி

Actor Yogibabu: வடிவேலு ஆரம்பத்தில் கஷ்டப்பட்டு சினிமாவில் வாய்ப்பு கேட்டாலும் அதன் பிறகு அவருடைய திறமையால் முன்னுக்கு வந்தார். ஆனால் அது உடன் சேர்ந்து கர்வமும் தொற்றிக் கொண்டது. இதனால் பல தயாரிப்பாளர்களை வடிவேலு சுத்தலில் விட்டார். மேலும் இயக்குனர் ஷங்கரிடமும் பிரச்சனை ஏற்பட்டது.

ஆகையால் வடிவேலு நான்கு வருடங்களுக்கு சினிமாவில் நடிக்க கூடாது என ரெட் கார்ட் தடை விதிக்கப்பட்டது. இப்போது தான் அந்தத் தடை நீங்கிய நிலையில் படங்களில் நடித்து வருகிறார். ஆனால் நடுவில் பிரேக் விட்டதால் வடிவேலுவால் விட்ட மார்க்கெட்டை பிடிக்க முடியவில்லை.

Also Read : உயிரே போனாலும் கண்டுக்காத வடிவேலு.. நடிகருக்காக ஓடோடி வந்த விஜய் டிவி KPY பாலா

அவர் கதாநாயகனாக நடித்த நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் படுதோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து மாமன்னன், சந்திரமுகி 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த சூழலில் வடிவேலுக்கு அடுத்த வாரிசாக உருவாகி வருகிறார் யோகி பாபு. ஆரம்பத்தில் இவர் உருவ கேலிக்கு உள்ளானார்.

ஆனாலும் இவருடைய வித்யாசமான காமெடி ரசிகர்களை கவர்ந்தது. அதன் பின்பு டாப் நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்தார். அதுவும் கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவை ரூட் விடுவார். மேலும் வடிவேலுவைப் போல யோகி பாபுக்கும் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு வந்தது.

Also Read : சினிமாவில் ரொம்ப லேட்டா ஜெயித்த 5 காமெடி நடிகர்கள்.. வடிவேலு ரெட் கார்டுக்கு பின் வளர்ந்த சுவாமிநாதன்

அவ்வாறு நடித்த சில படங்களும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது யோகி பாபு கைவசம் கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்கள் இருக்கிறதாம். இவ்வாறு பல தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கி விட்டு கால்சீட் கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறாராம். இதனால் யோகி பாபு நடிக்க இருந்த படங்கள் எல்லாமே தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.

எனவே சினிமா கவுன்சிலில் இவருக்கு ரெட் கார்ட் கொடுக்க தயார் பண்ணிக் கொண்டிருக்கிறார்களாம். ஒருவருக்கு வளர்ச்சி வரும் போது அடக்கம் என்பது மிகவும் தேவை. வடிவேலுவைப் போல இவரும் கொஞ்சம் ஆட்டம் காண்பித்ததால் இப்போது இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

Also Read : சர்க்கரை நோய் மாத்திரை வாங்கக்கூட வழியில்லாத நடிகர்.. மீண்டும் கொடூர முகத்தை காட்டும் வடிவேலு.!

Trending News