வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விக்னேஷ் சிவன் போல் மகிழ்திருமேனிக்கும் வரும் ஆப்பு.. ரீ என்ட்ரி இயக்குனர்களுடன் பேச்சுவார்த்தையில் லைக்கா

தமிழ் சினிமாவில் ஒருபுறம் விஜய்யின் லியோ பட ப்ரோமோ வீடியோ குறித்தும், அப்படத்தின் பட்ஜெட், வசூல் நடிகர்கள் குறித்தும் ஒரு பக்கம் செய்திகள் வெளியானாலும், அஜித்தின் ஏகே 62 படத்தின் கதி என்னவாகும் என்பதே பலரது கேள்வியாக உள்ளது. விக்னேஷ் சிவன், நயன்தாரா சிபாரிசு மூலமாக வாய்ப்பை பெற்று அஜித்தின் ஏகே62 படத்தை இயக்க ஆயத்தமானார். ஆனால் அஜித்திற்கு, விக்னேஷ் சிவனின் கதை பிடிக்கவில்லை என்று கூறி இப்படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இவர் நீக்கப்பட்டதாக கூறப்பட்ட அடுத்த சில மணி நேரங்களிலேயே இயக்குநர்கள் மகிழ்திருமேனி, விஷ்ணுவர்தன் இப்படத்தை இயக்குவார்கள் என செய்திகள் உலா வந்தன. அதில் விஷ்ணுவர்தன் அதிக சம்பளம் கேட்பதால் அஜித் கடுப்பான நிலையில், உதயநிதியின் சிபாரிசில் வந்த மகிழ்திருமேனி அஜித்திடம் கதை கூறி ஓகே ஆகியுள்ளார். இதனால் குஷியில் மிதந்து வந்த மகிழ்திருமேனிக்கு, லைகா நிறுவனம் விக்னேஷ் சிவனுக்கு வைத்த ஆப்பு போல் இவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Also Read: அஜித்தை சொக்குப்பொடி போட்டு வைத்திருக்கும் விஷ்ணுவர்தன்.. மகிழ்திருமேனிக்கு கொடுத்த வாய்ப்பிற்கு இதான் காரணம்

மகிழ்திருமேனி தான் ஏகே62 படத்தை இயக்குவார் என்று உறுதியாகிய நிலையிலும், எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வராததால் பல இயக்குனர்கள் ஏகே62 படத்தை இயக்க பிளான் செய்து லைக்கா நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதிலும் முக்கியமாக ரீ என்ட்ரி கொடுக்க நினைக்கும் இயக்குனர்கள் தான் தற்போது முந்திக்கொண்டு வருகிறார்களாம்.

தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் இருந்தாலும் காலப்போக்கில் படங்களை இயக்குவதை நிறுத்திவிட்டு நடிப்பது, தயாரிப்பது என பல வேலைகளை செய்து வருவார்கள். அப்படிப்பட்ட இயக்குனர் தான் கே.எஸ்.ரவிக்குமார், இவர் தற்போது பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துவரும் நிலையில், சில வருடங்களுக்கு முன்பு கமல், ரஜினி, அஜித் என இவர் இயக்கிய படங்கள் இன்று வரை பேசக்கூடியது.

Also Read: மகிழ் திருமேனியுடன் கைகோர்த்த இயக்குனர்.. வேற லெவல் சர்ப்ரைஸ் கொடுத்த ஏகே 62

அஜித்தின் வரலாறு திரைப்படத்தை இயக்கிய கே.எஸ்.ரவிக்குமார் தற்போது ஏகே62 படத்தை இயக்க முயற்சி செய்து வருகிறாராம். இவரைப்போலவே விஜய்யின் கில்லி, குருவி, சிம்புவின் ஒஸ்தி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் தரணியும், அஜித்துடன் முதன்முதலாக இணைய ஏகே62 படத்தை இயக்க லைகாவிடம் மும்முரமாக பேசி வருகிறாராம். மேலும் இவர்கள் இருவரை தவிர, மற்ற சில இயக்குனர்களும் லைகாவிடம் மறைமுகமாக பேசி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் போன்ற முன்னணி நடிகர் மற்றும் வசூல் மன்னன் படங்களை இயக்கிவிட்டால் போதும், அந்த இயக்குனர்களின் மார்க்கெட் இந்திய அளவில் உயர்வதற்கான வாய்ப்புள்ளது. இதை யோசித்து பல இயக்குனர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்த துடித்து வருகின்றனர். தற்போது மகிழ்திருமேனியின் நிலை தான் சற்று கவலைக்கிடமாக உள்ளது என்றும் லைகா இதற்கு கூடிய சீக்கிரம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் பொதுவான கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.

Also Read: கதை காப்பிக்கு கொடுத்த புது விளக்கம்.. விஜய், அஜித் இயக்குனர்களின் மாறுபட்ட சிந்தனை

Trending News