திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

இப்படியே போனா தலை தப்பாது.. விஜய் சேதுபதி போல ஐஸ்வர்யா ராஜேஷால் ஓட்டம் பிடித்த தியேட்டர் ஓனர்கள்

விஜய் சேதுபதியை பொருத்தவரையில் வருடத்திற்கு டஜன் கணக்கில் படங்களில் நடித்து வந்தார். வாரத்திற்கு தவறாமல் ஒரு படமாவது விஜய் சேதுபதியின் படம் திரையரங்குகளில் வெளியாகும். ஆனால் கிடைக்கும் படங்கள் எல்லாம் விஜய் சேதுபதி நடித்ததால் அந்த படங்கள் தோல்வியை தான் தழுவியது.

இப்போது விஜய் சேதுபதிக்கு போட்டியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நிக்க கூட நேரமில்லாத அளவுக்கு படங்களில் நடித்து வருகிறார். ஆனால் சமீபகாலமாக அவர் நடிப்பில் வெளியான படங்கள் படு தோல்வியை தழுவியது. அந்த வகையில் தி கிரேட் இந்தியன் கிச்சன், டிரைவர் ஜமுனா, ஃபர்கானா என அடுத்தடுத்த ஃபிளாப் படங்களை கொடுத்திருந்தார்.

Also Read : ஐஸ்வர்யா ராஜேஷ் தேர்ந்தெடுத்த 5 அற்புதமான கதைகள்.. ஆண்களுக்கு சவுக்கடி கொடுத்த கிரேட் இந்தியன் கிச்சன்

நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் கண்டிப்பாக ஐஸ்வர்யா ராஜேஷ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடிக்கலாம் என அவரது நெருங்கிய வட்டாரம் கூறியுள்ளனர். ஆனால் டாப் நடிகைகளுக்கு இணையாக இவருக்கு சம்பளம் இல்லை என்றாலும் வருஷத்திற்கு 10 படங்களுக்கு மேல் நடிக்கிறார்.

ஆகையால் குறைந்த சம்பளம் வாங்கினாலும் அவர்களை விட அதிகமாக சம்பாதித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்நிலையில் இந்த வார ரேஸிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் தவறாமல் பங்கு பெறுகிறார். அதாவது ஜெய் கதாநாயகனாக நடித்திருக்கும் தீராத காதல் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார்.

Also Read : ஐஸ்வர்யா ராஜேஷ் ஓவர் நெருக்கம் காட்டிய 4 படங்கள்.. விஜய் சேதுபதியுடன் கிசுகிசுக்கப்பட்ட அந்த படம்

ஆனால் கடந்த வாரம் வெளியான ஃபர்கானா படத்தால் தியேட்டர் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் தியேட்டர் ஓனர்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இனியும் ஐஸ்வர்யா ராஜேஷின் படத்தை வெளியிட்டால் அவர்களின் தலை தப்பாது என்ற பயத்தில் உள்ளனர்.

இதன் காரணமாக தீராத காதல் படத்தை வெளியிட தியேட்டர் ஓனர்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள். ஐஸ்வர்யா ராஜேஷ் படத்துக்கு இப்படி ஒரு நிலைமையா என ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சற்று கதையில் கவனம் செலுத்தினால் விட்ட மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க ஐஸ்வர்யா ராஜேஷுக்கு வாய்ப்பு இருக்கிறது.

Also Read : காற்று வாங்கிய தியேட்டர்.. தொடர் பிளாப்பால் விரக்தியில் ஐஸ்வர்யா ராஜேஷ்

Trending News