திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய் சேதுபதி போல், அக்கட தேசத்திற்கு தஞ்சம் புகுந்த நடிகர்.. 100 கோடி கலெக்ஷன் பார்த்த படம்

Actor Vijay Sethupathi: விக்ரம் படத்தில் கிடைத்த வெற்றிக்கு பிறகு பாலிவுட்டில் கால் பதித்துள்ள முன்னணி கதாநாயகன் தான் விஜய் சேதுபதி. அவ்வாறு தனக்கான வாய்ப்பை தேடியும் மற்றும் தன் திறமையை வெளிக்காட்டவும் பாலிவுட்டில் தஞ்சம் புகுந்துள்ளார். இவரைப்போல் தற்பொழுது அக்கட தேசத்தில் 100 கோடி கலெக்ஷன் பார்த்து வரும் நடிகர் பற்றிய தகவலை இங்கு காண்போம்.

தமிழில் ஓடிடியில் வெளியாகி, மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்ற படம் தான் வினோதய சித்தம். தம்பி ராமையா, சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தின் ரீமேக் தற்பொழுது தெலுங்கில் ப்ரோ என்ற பெயரில் பட்டையை கிளப்பி வருகிறது.

Also Read: 20 வயதில் ஐட்டம் டான்ஸ் ஆடி புகழின் உச்சிக்கு சென்ற நடிகை.. ஒரே படத்தால் தலைகீழாய் மாறிய மோசமான வாழ்க்கை

மேலும் சமுத்திரக்கனி தான் இப்படத்தை இயக்கியுள்ளார். கடந்த மாதம் 28ஆம் தேதி வெளிவந்த இப்படத்தில் பவுன் கல்யாண் மற்றும் நடிகர் சாய் தரம் தேஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். தமிழில் தன் படத்துக்கு கிடைத்த வெற்றியை கொண்டு தெலுங்கில் தற்பொழுது இவர் மேற்கொண்ட இப்படம் வசூல் வேட்டையை கண்டு வருகிறது.

அவ்வாறு படம் வெளிவந்த முதல் நாளே சுமார் 30 கோடியை வசூலித்தது. அதைத் தொடர்ந்து இரண்டாம் நாள் சற்று குறைவாக வசூலித்தாலும், இதுவரை 100 கோடி கலெக்ஷன் பார்த்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: தொடர்ந்து 3 மணி நேரம் ஒளிபரப்பாகும் கிளைமாக்ஸ் காட்சி.. டிஆர்பி இல்லாததால் ஊத்தி  மூட போகும் விஜய் டிவி

அவ்வாறு சமுத்திரகனி இயக்கத்தில் மேற்கொண்ட படங்கள் ஆன நாடோடிகள், போராளி வெற்றிக்கு பிறகு இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமீப காலமாக இவர் ஏற்ற குணசித்திர கதாபாத்திரங்கள் பெரிதாய் பேசப்படாத நிலையில் தற்போது அக்கட தேசத்தில் தன் முயற்சியை மேற்கொண்டு வெற்றி கண்டு வருகிறார்.

மேலும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தில் கிடைத்த இத்தகைய வெற்றியை சாதனையாக பார்க்கின்றனர். மேலும் தன் படத்திற்கான வெற்றியை கொண்டாடி வரும் சமுத்திரக்கனி மேற்கொண்டு தெலுங்கில் பல படங்கள் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Also Read: லியோவை போல் ப்ரீ ரிலீஸ் பிசினஸில் மல்லுக்கட்டும் கார்த்தியின் 25வது படம்.. அடேங்கப்பா! இத்தனை கோடியா

Trending News