புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கோட் படத்தில் விஜயகாந்த் போல் மற்றும் ஒரு நடிகர்.. கமுக்கமாக காய் நகர்த்தும் வெங்கட் பிரபு

Venkat Prabhu In Goat Movie: நிற்காமல் நதி போல் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு ஏற்ப விஜய் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஆட்டநாயகனாக ஜொலித்துக் கொண்டு வருகிறார். இந்த வெற்றியை அரசியலிலும் நட வேண்டும் என்பதற்காக தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியின் மூலம் வர இருக்கிறார்.

ஆனால் இரண்டு வருடங்கள் இருப்பதால் அதற்குள் இரண்டு படங்களை நடித்து விட வேண்டும் என்று நினைக்கிறார். அந்த வகையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருடன் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல், ஜெயராம், பிரேம்ஜி, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி போன்ற பல முன்னணி ஆர்டிஸ்ட்கள் நடித்து வருகிறார்கள்.

இவர்களுடன் சேர்ந்து முக்கியமான காட்சியில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் கேமியோ ரோலில் வருகிறார். அதாவது AI டெக்னாலஜி பயன்படுத்தி விஜயகாந்துக்கு சிறப்பு தோற்றம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதைப்பற்றி மொத்த டீமும் பிரேமலதா விஜயகாந்த் இடம் பெர்மிஷன் கேட்டு அதன்படி செயல்படுத்தி வருகிறார்கள். இதற்கு காரணம் விஜய்க்கு செந்தூரப்பாண்டி படத்துக்கு பின் தான் தொடர் வாய்ப்புகளும் வெற்றியும் குவிந்தது.

அந்த நன்றி கடனை தீர்க்கும் வகையில் பல வருடங்கள் கழித்து மறுபடியும் விஜயகாந்த் உடன் விஜய்யை திரையில் பார்த்தால் மக்கள் ரொம்பவே சந்தோஷப்படுவார்கள். அதனால் இந்த மாதிரி ஒரு சம்பவத்தை யோசித்து வெங்கட் பிரபு செய்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து இன்னொரு மறைந்த நடிகரையும் AI டெக்னாலஜி மூலம் வெங்கட் பிரபு கொண்டுவரப் போகிறார்.

வெங்கட் பிரபு செய்யப் போகும் சம்பவம்

அந்த நடிகர் வேறு யாருமில்லை மறைந்த சின்ன கலைவாணர் விவேக் தான். இவர் விஜய், பிரசாந்த் மற்றும் பிரபுதேவா போன்ற மூன்று பேருக்கும் மிகவும் நெருங்கிய நண்பராக இருந்திருக்கிறார். அந்த வகையில் இவர்களுடன் சேர்ந்து மறுபடியும் விவேக்கை கொண்டு வரும் வகையில் மூன்று காட்சிகளில் இடம்பெறப் போகிறார். அதற்கான வேலையில் தான் வெங்கட் பிரபு கமுக்கமாக பார்த்து வருகிறார்.

ஏற்கனவே கோட் படத்தில் ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் இணைந்து கலக்கி கொண்டு வருகிறார்கள். தற்போது விஜயகாந்த் மற்றும் விவேக் இவர்கள் இருவருமே மக்களுக்கு மிகவும் பிடித்தமான கலைஞர்கள். அந்த வகையில் இவர்களை வைத்து வெங்கட் பிரபு கோட் படத்தில் தரமான சம்பவத்தை செய்து அசத்தப்போகிறார்.

Trending News