ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பாக்யராஜிடம் சிஷ்யனவதற்கு துடித்த பிரபல இயக்குனர்.. கடைசிவரை நிறைவேறாமல் போன ஆசை

எந்த ஒரு இயக்குனருமே எடுத்த எடுப்பிலேயே இயக்குனராக உருவாகவில்லை. ஒரு பெரிய இயக்குனரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து அதன் பின்னர் இயக்குனராக வளர்வதற்கு இடையில் ஏகப்பட்ட பிரச்சனைகள், நிராகரிப்புகள் என பல சிக்கல்களை தாண்டியே முன்னணி இயக்குனராக தன்னை நிலை நிறுத்தி கொள்கிறார்கள்.

அவ்வாறு மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர் தான் இயக்குனர் லிங்குசாமி. இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய லிங்குசாமி ஆனந்தம் படம் மூலம் இயக்குனராக திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் ரன், சண்டைக்கோழி, பையா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை வழங்கினார்.

நன்றாக சென்று கொண்டிருந்த அவர் திரை வாழ்க்கையில் திடீரென ஏற்பட்ட நஷ்டம் காரணமாக சில காலம் திரையுலகில் இருந்து விலகி இருந்தார். இந்நிலையில் தற்போது தான் அந்த பிரச்சனைகளை எல்லாம் முடித்து விட்டு மீண்டும் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்நிலையில் இவர் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது இயக்குனர் லிங்குசாமி 90களில் பிரபல இயக்குனராக வலம் வந்த பாக்யராஜிடம் எப்படியாவது உதவி இயக்குனராக சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசையில் தான் ஊரில் இருந்து சென்னைக்கு கிளம்பி வந்தாராம். அந்த சமயத்தில் பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான அந்த 7 நாட்கள் படத்தின் கதையை தனது நண்பர்கள் மத்தியில் சொல்லி சொல்லி சந்தோசப்படுவாராம்.

lingusamy-cinemapettai
lingusamy-cinemapettai

இதுதவிர பின்னாளில் பாக்யராஜ் மாதிரி கதை எழுதி இயக்குனர் மணிரத்னம் மாதிரி பிரம்மாண்டமாக அந்த கதையை படமாக எடுக்க வேண்டும் என மிகவும் ஆசைப்பட்டாராம். ஆனால் இறுதிவரை இயக்குனர் லிங்குசாமியால் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்ற முடியவில்லை. தற்போது வரை இது ஒரு நிறைவேறாத ஆசையாகவே இருந்து வருகிறதாம்.

Trending News