வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

லிங்குசாமி நடுத்தெருவுக்கு வரக் காரணமாக இருந்த இரண்டு நடிகர்கள்.. அடப்பாவமே!

தமிழ் சினிமாவில் பர பர பரவென முன்னணி இயக்குனராக வளர்ந்து கொண்டிருந்த லிங்குசாமி திடீரென காணாமல் போனதுபோல் ஆகிவிட்டார். அதற்கு காரணம் குறிப்பிட்ட இரண்டு நடிகர்கள் தான் என்கிறார்கள் அவரது வட்டாரங்கள்.

ரன், சண்டக்கோழி என பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த லிங்குசாமி தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என அவரது வட்டாரங்களில் விசாரித்தபோது, அதை ஏன் கேக்கறீங்க? எனும் அளவுக்கு பல ரகசியங்களை கூறியுள்ளனர்.

இயக்குனராக இருக்கும் வரை லிங்குசாமி சந்தோசமாகத்தான் இருந்தாராம். ஆனால் என்னைக்கு தயாரிப்பை கையில் எடுத்தாரோ அன்னைக்கு பிடித்தது சனி என்கிறார்கள். முதலில் மினிமம் பட்ஜெட் படங்களை தயாரித்து வந்ததால் நல்ல இலாபம் பார்த்து வந்தாராம் லிங்குசாமி.

ஆனால் முதன்முதலாக கமல்ஹாசன் படத்தை தயாரித்தது தான் அவருக்கு பெரிய அடியாக அமைந்துவிட்டது. கமல்ஹாசன் நடித்த உத்தம வில்லன் படம் எவ்வளவு பெரிய தோல்விப் படம் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.

அந்தப் படத்தால் பல கோடி நஷ்டத்திற்கு ஆகிவிட்டார் லிங்குசாமி. அதுமட்டுமில்லாமல் அதற்கு முந்தைய வருடம்தான் சூர்யாவை அஞ்சான் என்ற தோல்விப் படத்தை கொடுத்து பீல்ட் அவுட் இயக்குனராக ஆனார். அடுத்தடுத்த இரண்டு வருடங்களில் அவருடைய இரண்டு தவறான முடிவுகளால் மொத்தத்தையும் இழந்து நடுத்தெருவுக்கு வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

அதன் பிறகு அவர் எடுத்த படமும் ஓடவில்லை. தற்போது முழுமூச்சாக தன்னுடைய பழைய திறமைகளை மீட்டெடுக்க வேண்டுமென தெலுங்கு நடிகர் ராம்போதனி என்பவரை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார்.

lingusamy-next-movie
lingusamy-next-movie

Trending News