வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

மொத்த தமிழ் இயக்குனர்களுக்கும் லிங்குசாமி வைத்த ஆப்பு.. ஓட ஓட அடித்த தெலுங்கு திரையுலகம்

தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் ஆட்டம் போட்ட இயக்குனர்கள் எல்லோரும், இப்பொழுது தெலுங்கு பக்கம் பொட்டி படுக்கையை தூக்கி விட்டனர். தெலுங்கு சினிமாவில் தமிழ் இயக்குனர்களுக்கு எப்பொழுதும் ஒரு பெரிய மரியாதை உண்டு.

அங்கே நல்ல மரியாதை கிடைப்பதை புரிந்து கொண்ட தமிழ் இயக்குனர்கள்  மீண்டும், மீண்டும் அரைத்த மாவையும், துவச்ச துணியையும் வைத்து தெலுங்கில் ஜெயித்து விடலாம் என்று ஒரு எண்ணத்தில் அங்கே செல்கின்றனர்.

Also read : மொக்க படத்திற்கு ஓவர் சீன் போட்ட லிங்குசாமி.. இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்

இப்படி தமிழ் சினிமாவில் உள்ள பழைய கதைகளை, புதிதாக உருவாக்கி தெலுங்கு, சினிமாவில் உள்ள தயாரிப்பார்களிடம், நடிகர்களிடமும் மூளை சலவை செய்வது இவர்களுக்கு எளிதான ஒரு விஷயமாக மாறிவிட்டது.

எஸ் ஜே சூர்யா, A R முருகதாஸ் வரிசையில் தற்போது லிங்குசாமி, ஷங்கர் ஜெயம்மோகன் என பல இயக்குனர்கள் தங்களுடைய பழைய பருப்பை வேக வைக்க போட்ட திட்டத்தை இப்பொழுது லிங்குசாமியின் படம் தவிடுபொடியாக்கி விட்டது.

Also read : ஒரே நாளில் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய லிங்குசாமி.. இதெல்லாம் உங்களுக்கு ஓவர் நக்கலா இல்லையா

தி வாரியர் படத்தின் ரிசல்ட்டை பார்த்த தெலுங்கு சினிமா தமிழ் இயக்குனர்கலே வேண்டாம் என அரண்டு போய் உள்ளனர்.இப்படி தன் இஷ்டத்துக்கு செலவு செய்வது,கதை எழுதுவது, படப்பிடிப்பு நடத்துவது என  இருந்த தமிழ் இயக்குனர்களுக்கு செக் வைத்துள்ளனர் தெலுங்கு  சினிமாத்துறையினர்.

அது மட்டுமின்றி தெலுங்கு தயாரிப்பாளர்கள் சிலர், தமிழ் இயக்குனரிடம் நேரடியாகவே மிரட்டல் விடுக்க, இனி நாங்கள் உங்க பார்டரை நெருங்க மாட்டோம் என ஒதுங்கி விட்டனர் தமிழ் இயக்குனர்கள். எப்படியோ லிங்குசாமியால் தமிழ் சினிமாவிற்கு நல்லது நடந்திருக்கிறது என்று சொல்லலாம்.

Also Read : லிங்குசாமியை அடுத்து விழி பிதுங்கி நிற்கும் வெங்கட்பிரபு

Trending News