வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

பொய்யைப் பரப்பி விட்ட நெட்டிசன்கள்.. கோபமடைந்து பதிலளித்த மாதவன்

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் அனைத்து நடிகைகளுக்கும் பிடித்துப்போன நடிகராக இருந்தவர் மாதவன். அப்போதெல்லாம் மாதவன் கூட நடிக்க முடியாத என ஏங்காத நடிகைகளே இல்லை என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு அனைத்து நடிகைகளுக்கும் பிடித்துப்போகும் நடிகராக இருந்தார் மாதவன்.

காலம் ஒரு சக்கரம் என்பது அவ்வப்போது அனைவருக்கும் உணர்த்துவது உண்மைதான் அப்படி சினிமாவில் கொடிகட்டிப் பறந்த மாதவன் ஒரு கட்டத்திற்கு பிறகு பெரிய அளவு பட வாய்ப்புகள் வராமல் சில வருடங்கள் சினிமாவை விட்டு விலகி இருந்தார். அப்போது பல தரப்பினரும் மாதவனுக்கு உண்மையாகவே பட வாய்ப்புகள் வருவதில்லையா அல்லது இவர் நிராகரிக்கிறா  என தொடர்ந்து கேள்விகளை எழுப்பினார்.

அந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் பல வருடங்களுக்கு பிறகு இறுதிச்சுற்று என்ற படத்தின் மூலம் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார் ரீ என்ட்ரி கொடுத்த முதல் படமே அவருக்கு வெற்றியை கொடுக்க அடுத்தடுத்து பல படங்கள் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார்.

madhavan lingusamy
madhavan lingusamy

 சமூக வலைதள பக்கத்தில் இருக்கும் நெட்டிசன்கள் அவ்வப்போது ஏதாவது ஒரு சர்ச்சையை கிளப்புவது தேவையில்லாத செய்திகளைப் பற்றி பரப்புவதுமாவே வாடிக்கையாக வைத்துள்ளனர். அப்படி மாதவன் லிங்குசாமி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக பொய்யான தகவல்களை சமூக வலைதளப் பக்கத்தில் பரப்பியுள்ளனர்.

இது எப்படியோ மாதவன்  காதில் விழ உடனே அவர் சமூக வலைதளப் பக்கத்தில் அவர் நான் லிங்குசாமி படத்தில் நடிப்பதும் அதுவும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பது உண்மை இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த மாதிரி பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் இதனை ரசிகர்கள் நம்ப வேண்டாம் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

Trending News