திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

லிங்குசாமி படத்தில் இணைந்த 15 வயது இளம் நடிகை.. அதிகாரப்பூர்வமாக படக்குழு வெளியிட்ட தகவல்

தமிழில் பையா, சண்டைக்கோழி, அஞ்சான் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் லிங்குசாமி கடந்த இரண்டு ஆண்டுகளாக படங்களை இயக்காமல் இருந்தார். இந்நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் பெயரிடப்படாத புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.

தெலுங்கின் முன்னணி நடிகரான ராம்பொத்தேனி நடிக்கும், இப்படத்தில் ஹீரோயினாக கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளார். கடந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான உப்பென்னா படம் மூலம் தெலுங்கு சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் கீர்த்தி ஷெட்டி. கொரோனா ஊரடங்கு காலத்திலும் இப்படம் வசூலில் 100 கோடிக்கு மேல் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

பதினைந்தே வயதான கீர்த்தி ஷெட்டி இப்படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். அந்த சமயத்தில் சோசியல் மீடியா குயினாக வலம் வந்தவர் இவர்தான். இவரின் அழகை புகழாத ரசிகரே இல்லை என்றுதான் கூறவேண்டும்.

krithishetty-cinemapettai
krithishetty-cinemapettai

கீர்த்தி ஷெட்டியின் அடுத்த படம் எப்போது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், லிங்குசாமி படத்தில் இணைந்திருப்பதை படக்குழுவினர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Trending News