வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

பிரபல நடிகருக்கு வில்லனாக போகும் மாதவன்.. விசித்திரமான கதாபாத்திரத்தை வைத்திருக்கும் லிங்குசாமி

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக இருந்தவர் மாதவன். இவரது நடிப்பில் வெளியான காதல் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. எப்போதும் ரொமான்டிக் ஹீரோக்களுக்கு ஒரு காலம் வரைக்கும் தான் வரவேற்பு இருக்கும் அதே போல தான் மாதவனுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர்.

ஆனால் மாதவன் இணையாக போட்டியாக நடித்த பல நடிகர்கள் தற்போது தொடர்ந்து முன்னணி நடிகர்களாக நடித்து வருகின்றனர். ஆனால் மாதவனுக்கு ஹீரோ மார்க்கெட் இல்லாததால் தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சினிமாவில் கவனம் செலுத்தாமல் இருந்த மாதவன் இறுதிச்சுற்று என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு விஜய் சேதுபதியுடன் விக்ரம்வேதா படத்திலும் ஜோடி சேர்த்து வெற்றி கண்டார். அதனால் தற்போது இவருக்கு குணச்சித்திர கதாபாத்திரம் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

ram pothineni
ram pothineni

லிங்குசாமி படங்களுக்கு தமிழ் சினிமாவில் பெரிய அளவு வரவேற்பு இல்லாததால் தற்போது தெலுங்கு பக்கம் சென்று விட்டார். தெலுங்கு சினிமாவின் இளம் நடிகரான ராம் பொத்தினேன் வைத்து ஒரு ஆக்சன் படத்தை எடுக்க இருக்கிறார். இப்படத்திற்கு கெத்தான வில்லன் வேண்டுமென பல நடிகர்களை அணுகியுள்ளார் லிங்குசாமி.

ஆனால் யாரும் செவிசாய்க்கவில்லை நீண்ட நாட்களாக யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்து வந்த லிங்குசாமிக்கு ஒரு யோசனை கிடைத்துள்ளது. லிங்குசாமி இயக்கிய ரன் படத்தின் மூலம்தான் மாதவனுக்கு கமர்சியல்யான ரசிகர்கள் உருவாகினர்.

அதனால் தற்போது லிங்குசாமி மாதவனிடம் வில்லன் கதாபாத்திரத்தை பற்றி பேசி உள்ளதாகவும் அதில் ஒரு சில மாற்றங்கள் மட்டும் செய்யுமாறு மாதவன் கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதனால் விரைவில் லிங்குசாமி மற்றும் மாதவன் கூட்டணி அமையும் என சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Trending News