வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கமலால் பிடித்த ஏழரை சனி.. ஆடம்பரத்தினால் அழிந்த இயக்குனர் லிங்குசாமி

லிங்குசாமி கும்பகோணத்தில் பிறந்து சென்னையில் ஏ வெங்கடேஷ் மற்றும் விக்ரம் போன்ற இயக்குனர்களுடன் பணியாற்றினார். பின்னர் தன் சொந்த முயற்சியால் இயக்குனர் அவதாரம் எடுத்து ஆனந்தம், ரன் போன்ற படங்களின் மூலம் பல மாஸ் ஹீரோக்களை உருவாக்கி தானும் ஒரு மாஸ் டைரக்டர் என்று பெயர் பெற்றார். இவரது படங்களுக்கு என்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

இயக்குனர் வேலையை மிகச் சரியாக செய்துவந்த லிங்குசாமி. திருப்பதி பிரதர்ஸ் என்ற தயாரிப்பாளர் அவதாரத்தை எடுத்தார். அஞ்சான் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அதிலிருந்து மீண்டு வருவதற்கு பல வருடங்கள் ஆகின. அதில் சூர்யா தனது சம்பளத்தை விட்டுக் கொடுத்ததாக தகவல் வெளியானது.

Also read: இயக்குனர் லிங்குசாமி அதிரடி கைது.. காரணத்தைக் கேட்டு அதிர்ந்து போன தமிழ் சினிமா

இவரது தயாரிப்பில் சதுரங்க வேட்டை, கோலிசோடா, மஞ்சப்பை, தீபாவளி இன்னும் எண்ணற்ற படங்கள் வெற்றி பெற்றாலும், வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி அடையவில்லை. இதில் ரஜினி முருகன் திரைப்படம் அவருக்கு வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. ஆனால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிய உத்தமவில்லன் திரைப்படம். இதில் கமல், லிங்குசாமி, கிரீன் ஸ்டுடியோ போன்றவர்கள் சேர்ந்து தயாரித்தாலும் இதில் பெரும்பான்மையான முதன்மை தயாரிப்பாளர் லிங்குசாமி மட்டுமே.

இந்த படத்தின் மூலம் வாழ்க்கையின் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டார். 40 கோடிக்கு மேல் இவருக்கு கடன் சுமை தலைக்கு மேல் ஏறியது. படத்தின் நஷ்டத்தை கண்டுகொள்ளாமல் சென்று விட்டார் கமல் என்று கூறப்பட்டது. இருப்பினும் லிங்குசாமி தனது ஆடம்பரம் தேவையில்லாத பணத்தை வட்டிக்கு வாங்கி வாங்கி படம் எடுக்கவும் முடியாமல் தவித்தார்.

Also read: லிங்குசாமியை அடுத்து விழி பிதுங்கி நிற்கும் வெங்கட்பிரபு.. 100 கோடி வசூல் எடுத்தும் இதான் நிலைமை

படம் எடுப்பதற்காக கடன் வாங்கி அதனை ஆடம்பரமாக செலவு செய்வது லிங்குசாமி வழக்கமாக கூறப்படுகிறது. இதனால் மேலும் மேலும் கடன் சுமை தலைக்கு மேல் ஏறியது. இயக்குனர் என்ற பெயரையும் இழந்து தவித்தார். பணத்திற்காக ஆசைப்பட்டு கிரியேட்டிவிட்டி இல்லாமல் இயக்குனராகவும் ஜெயிக்க முடியவில்லை இதுதான் உண்மை.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை நல்ல இயக்குனரை இழந்துவிட்டது. நல்ல தயாரிப்பாளரையும் இழந்துவிட்டது. காரணம் அனுபவ இல்லாத தயாரிப்பாளர் ஆக ஆசை. இன்று சிறை தண்டனை வரை சென்றுவிட்டார். இதில் இருந்து மீண்டு படம் இயக்கி வெற்றி பெறுவது சுலபமான காரியமல்ல. அவருக்காக காத்திருக்கும் கோலிவுட் மற்றும் லிங்குசாமியின் தீவிர ரசிகர்கள்.

Also read: தோல்வியினால் துவண்டு போன லிங்குசாமி.. மேடையிலேயே கண்ணீர்விட்டு கதறிய பரிதாபம்

Trending News