Vijay: நடிகர் விஷாலுக்கு மட்டுமில்லாமல், இயக்குனர் லிங்குசாமிக்கும் ஒரு பெரிய பிரேக் கொடுத்த படம் தான் சண்டக்கோழி.
இந்த படம் நடிகர் விஷால் ஒரு அதிரடி ஆக்சன் ஹீரோவாக மாற்றியது. தமிழ் சினிமாவின் அடுத்த ஆக்சன் கிங் என்று விஷாலை ஒரு காலகட்டத்தில் மக்கள் கொண்டாடினார்கள்.
அதற்கு பிள்ளையார் சுழி போட்டதே சண்டக்கோழி படம் தான். இந்த படத்தைப் பற்றி சமீபத்தில் லிங்குசாமி ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்.
ரிஜெக்ட் செய்வதற்கு சொன்ன காரணம்!
சண்டக்கோழி படத்தில் விஜய்யை நடிக்க வைக்க தான் லிங்குசாமி நினைத்திருக்கிறார். அவரை மனதில் வைத்து தான் கதையையும் எழுதி முடித்திருக்கிறார்.
விஜய்யிடம் கதை சொல்ல போகும்போது விஜய்க்கு இந்த கதை ரொம்பவே பிடித்து போய்விட்டதாம். இரண்டாவது பாதியில் ராஜ்கிரண் உள்ளே வரும் சீன் சொல்லி இருக்கிறார்.
உடனே விஜய் என்னண்ணா ராஜ்கிரன் சார் மாதிரி ஒருத்தர் உள்ள வந்ததுக்கப்புறம் நான் அந்த படத்துல இருக்கிறதே வெளிய தெரியாது என்று சொல்லி இந்த கதையை ரிஜெக்ட் செய்து விட்டாராம். அதன் பிறகு தான் விஷால் இந்த படத்தில் நடித்திருக்கிறார்.