புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஒரே டேக்கில் பட்டையை கிளப்பிய ஷங்கரின் மகள்.. பாராட்டிய பிரபல இயக்குனர்

தமிழ் சினிமாவில் ஷங்கர் இயக்குனராக பல வெற்றிகளை பெற்றுள்ளார். இவர் தற்போது இந்தியன் 2 மற்றும் RC15 ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இந்தியன் 2 படத்தின் தயாரிப்பாளருக்கும் ஷங்கருக்கும் இடையே ஒரு சில மோதல்கள் ஏற்பட படப்பிடிப்பு நடத்தாமல் படக்குழு தள்ளி வைத்தனர்.

அதனால் ஷங்கர் அந்நியன் படத்தை ரன்வீர் சிங் வைத்து இயக்க முடிவு செய்தார். ஆனால் லைக்கா இந்தியன் 2 படத்தை முடிக்காமல் எந்த படத்தையும் இயக்கக் கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்தது. அதன்பிறகு இரு தரப்பிலும் விசாரித்து சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி இந்தியன் 2 படத்தை இயக்க முடிவு செய்தனர்.

ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் சூர்யா மற்றும் ஜோதிகா தயாரிப்பில் கார்த்தி ஜோடியாக விருமன் எனும் படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார். சமீபத்தில் அதிதி ஷங்கர் புகைப்படத்துடன் அதிகாரபூர்வமாக படக்குழு வெளியிட்டது. இதனைப் பார்த்த பலரும் ஷங்கர் மகள் படத்தில் நடிப்பது ஆச்சரியமாக பார்த்தனர்.

lingusamy-cinemapettai
lingusamy-cinemapettai

சமீபத்தில் இயக்குனர் லிங்குசாமி சித்ரா லட்சுமணனிடம் போனில் ஷங்கர் மகள் பற்றி பேசியுள்ளார். அதாவது ஷங்கர் போலவே அவரது மகளும் ஒரு புத்திசாலி நடிப்பில் பின்னி பெடல் எடுத்து விடுவார். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி காட்டுவதில் வல்லவர் என பேசியதாக கூறியுள்ளார்.

மேலும் இப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும், ஷங்கர் மகள் நடிப்பும் பெரிதாக பேசப்படும் என தெரிவித்துள்ளார். தற்போது படக்குழு கார்த்தி வைத்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். கார்த்தி மற்றும் முத்தையா மீண்டும் இப்படத்தின் மூலம் இணைந்துள்ளதால் கண்டிப்பாக இப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெறும் என பலரும் கூறி வருகின்றனர்.

Trending News