வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

படப்பிடிப்பு தொடங்கிய அன்றே விற்பனையான லிங்குசாமி படம்.. மாதவன் ரோலில் யார் ஹீரோ தெரியுமா.?

லிங்குசாமி இயக்கத்தில் இறுதியாக 2018 ஆம் ஆண்டு வெளிவந்த படம் சண்டைக்கோழி 2. இருப்பினும் இப்படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் இயக்குனர் லிங்குசாமி தெலுங்கு நடிகர் ராம் பொத்திலேனியை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்திற்காக பல முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.

யாரும் ஒத்துவராத நிலையில் தனது படங்களில் கதாநாயகனாக நடித்த மாதவனிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்பட்டது. ஆனால், இப்போது மாதவன் அந்த வேடத்தில் நடிக்கவில்லை எனவும், அவருக்கு பதிலாக நடிகர் ஆதி அந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இப்படி பல பிரச்சனைகளுக்கு இடையில் நேற்று இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. படப்பிடிப்பை தமிழ் தயாரிப்பாளரும், லிங்குசாமியின் தம்பியுமான போஸ் க்ளாப் அடித்து தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் இப்படத்தின் தமிழ் உரிமையை படப்பிடிப்பு தொடங்கிய அன்றே மாஸ்டர்பீஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றியுள்ளது. படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாளிலேயே படம் விற்பனையானதால் லிங்குசாமி மகிழ்ச்சியில் உள்ளார்.

lingusamy-cinemapettai
lingusamy-cinemapettai

Trending News