வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

மருந்துகடையை விட மதுபானகடை அதிகம்.. கள்ளக்குறிச்சி பிரச்சனை, திமுகவுக்கு முட்டுக் கொடுத்த கமல்

Kamal Speech about Kallakurichi Issue: கடந்த சில நாட்களாக தமிழகத்தின் கள்ளக்குறிச்சி பிரச்சனை பூதாகரமாக வெடித்து வருகிறது. சட்டத்துக்கு விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி அதை விற்பனை செய்ததால் விஷமாக மாறிய நிலை மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் நேற்று வரை 54 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 100க்கும் மேற்பட்டவர் தீவிர சிகிச்சையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த பிரச்சனை தொடர்பாக அரசியல்வாதிகளும் பல பிரபலங்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறி வந்திருக்கிறார். அதே மாதிரி மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல் பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக சந்தித்து ஆறுதல் கூறி இருக்கிறார்.

தொட்டிலையும் கிள்ளிவிட்டு பிள்ளையையும் ஆட்டும் கமல்

அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த கமல் கூறியது, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் மற்றும் பாதிப்பை அரசியல் ஆதாயமாகவோ விமர்சனமாகவோ பார்ப்பதைவிட இதை எப்படி சரி பண்ணலாம் என்று ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். இந்த வியாபாரத்தை செய்யும் எந்த அரசாக இருந்தாலும் அதிலிருந்து வரும் வருவாய் தொகையில் ஒரு பகுதி கண்டிப்பாக மனதத்துவரீதியாக பயன்படுத்த வேண்டும்.

ஒரு அளவுக்கு மேல் குடிக்கக் கூடாது என்ற விழிப்புணர்வை டாஸ்மார்க் பக்கத்திலேயே வைக்க வேண்டும். அதாவது சாலையில் விபத்து நடப்பதால் போக்குவரத்தை நிறுத்த முடியாது. வாகன வேகத்தை வெகுவாக குறைக்கவும் முடியாது. அதற்காகத்தான் புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. அது போல தான் இதற்கும் தீர்வு காணப்பட வேண்டும்.

மருந்து கடைகள் ஒரு தெருவில் எவ்வளவு இருக்கிறதோ, அதைவிட அதிகமாக டாஸ்மார்க் கடைகள் தான் இருக்கின்றன. குடிக்காத என்று அறிவுரை சொல்வதைவிட மிதமாக குடியுங்கள், உயிர்தான் முக்கியம் என்பதே எடுத்து சொல்லும் விதமாக ஒரு அறிவுரை டாஸ்மார்க் பக்கத்திலே கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள் என்று கள்ளக்குறிச்சி பிரச்சினைக்கு வேறு விதமாக திசை திருப்பி திமுக கட்சிக்கு முட்டுக் கொடுத்து பேசியிருக்கிறார்.

ஏனென்றால் இந்த பிரச்சனை திமுகவால் வந்ததில்லை. குடிகாரமக்கள் அதிகமாக இருப்பதினால் அளவுக்கு மீறி குடித்தனால் வந்த விளைவுகள் தான் என்று சொல்லி இருக்கிறார். ஆக மொத்தத்தில் அரசாங்க மேல் எந்த தவறும் இல்லை என்பதை கமல் அவருடைய பங்குக்கு சொல்லி நியாயப்படுத்தி விட்டார்.

என்ன தான் டாஸ்மார்க் பக்கத்தில் அறிவுரைகளை வைத்து கவுன்சிலிங் கொடுத்தாலும் அவர்களுக்கு தவறு என்று தெரிந்துதான் என்ன நடந்தாலும் பரவாயில்லை என்ற ஒரு அசட்டு துணிச்சலுடன் குடிக்கிறார்கள். அவர்களிடம் போய் கவுன்சிலிங் கொடுத்து மருத்துவ ரீதியாக அறிவுரை சொன்னால் அவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள். இது எப்படி இருக்குன்னா தொட்டிலையும் கிள்ளி விட்டு பிள்ளையும் ஆட்டுற மாதிரி இருக்கிறது.

கொழுந்துவிட்டு எரியும் கள்ளக்குறிச்சி பிரச்சனை

Trending News