வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

2024ல் ஏப்ரல் வரை ரிலீஸ் ஆக உள்ள 13 டாப் பட்ஜெட் படங்கள்.. அதிக வசூலை அள்ள போகும் படம் இதுதான்

13 films releasing between January and April 2024: இன்னும் சில தினங்களில் இந்த வருடம் நிறைவடைவதால் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக எல்லோரும் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்த சமயத்தில் சினிமா பிரியர்களை குஷிப்படுத்தும் வகையில் அடுத்த வருடம் ஜனவரி முதல் ஏப்ரல் வரை ரிலீஸ் ஆகும் டாப் ஹீரோக்களின் 13 படங்கள் எவை என்ற லிஸ்ட் வெளியாகி இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.

இதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இதில் சூப்பர் ஸ்டார்  மொய்தின் பாய் என்ற கேமியோ கதாபாத்திரத்தில் நடிப்பதால், இது ரஜினி படமாகவே பார்க்கப்படுகிறது. இதனால் பொங்கல் பண்டிகைக்கு சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு லால் சலாம் படம் தான் செம ட்ரீட் ஆக இருக்கும். தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் ஜனவரி 11-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. லால் சலாம், கேப்டன் மில்லர் படங்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்கிறது. இந்த இரண்டு படங்கள் இடையே அதிக வசூலை அள்ள போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அதேபோல் சிவகார்த்திகேயன் ஏலியன் உடன் ஜாலி பண்ணும் அயலான் படமும் ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படம் குட்டீஸ் முதல் பெரியவர்களை வெகுவாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் திரில்லர் படமாக டிமான்டி காலனி 2 படமும் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகிறது.

Also Read: திறமை இருந்தும் 35 வருடம் போராடி பெற்ற அங்கீகாரம்.. கமலை வயிறு குலுங்க சிரிக்க வைத்த நடிகர்

2024ல் ஜனவரி – ஏப்ரல் மாதத்துக்குள் ரிலீஸ் ஆகும் 13 படங்களின் லிஸ்ட்

பிப்ரவரி 10ஆம் தேதி ஸ்டார் மூவி திரைப்படமும், மார்ச் 29ஆம் தேதி சியான் விக்ரமின் அசுரத்தனமான நடிப்பில் தயாராகி இருக்கும் தங்கலான் படமும் வெளியாகிறது. தங்கலான் ரிலீஸ் ஆகும் அதே தினத்தில் கருடன் படமும் வெளியாகிறது. மேலும் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் கங்குவா படம்  ஏப்ரல் 11ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

அதைத்தொடர்ந்து வெகு நாட்களாக ரசிகர்களை காக்க வைத்த  உலகநாயகன் கமலஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் ஏப்ரல் 12ஆம் தேதி வெளியாகிறது. அதேபோல் தனுஷ் இயக்கி நடிக்க உள்ள D50 படமும் ஏப்ரலில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அதுமட்டுமல்ல கோலிவுட்டின் டாப் ஹீரோக்களான சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் படமும், அஜித்தின் விடாமுயற்சி படமும், விஜய்யின் தளபதி 68 படமும் அடுத்த வருட சம்மருக்கு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். ஆக மொத்தம் 13 படங்கள் 2024ல் ஜனவரி முதல் ஏப்ரல் மாதத்துக்குள் அடுத்தடுத்து வரிசையாக ரிலீஸ் செய்து பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்ட போகின்றனர்.

Also Read: கங்குவாவை அடுத்து கேங்ஸ்டர் ஆக களம் காண உள்ள சூர்யா. பலநூறு கோடி பட்ஜெட்டில் உருவாகும் படம்

Trending News