புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தீபாவளி ரேஸில் மோதும் படங்கள் லிஸ்ட்.. பெரிய தலக்கட்டு இல்லனு ஃபீல் வேணாம்.. நிறைய சாய்ஸ் இருக்கு

தமிழர்களின் முக்கிய பண்டிகையாக தீபாவளி உள்ளது. இப்பண்டிகைக்கு புதிய உடைகள், ஓராண்டு உழைத்ததற்கான போனஸ், பலகாரம், புது மணத் தம்பதிகளுக்கு தல தீபாவளி, பட்டாசுகள், வகை வகையான உணவுகள் என பாரம்பரியாக இப்பண்டிகையை மக்கள் கொண்டாடி வருகின்றனர். அத்துடன் பண்டிகை தினத்தில் தியேட்டருக்குக் குடும்பத்துடன் சென்று படம் பார்ப்பதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்த வகையில் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள படங்களை இதில் பார்ப்போம்.

அமரன்

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோர் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்சன் படம் அமரன்.. ஜிவி பிரகாஷ் குமார் இசையில், ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர் நேசனல் தயாரித்துள்ளது இப்படம் ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரைலர், டீசர், பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள ந்பிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 18 ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த நிலையில் இப்படம் ராணுவ வீரர் முகுந்த் வரதாராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிபப்டையாக வைத்து உருவாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் அக்டோபர் 31 ஆம் தேதி ரீலீஸாக உள்ளது. இப்படம் தீபாவளி ரேஸில் ஜெயிக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பிரதர்

ஜெயம் ரவி , பிரியங்கா மோகன், வி.டி. கணேஷ், ரமேஷ் ஆகியோர் நடிப்பில், எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் வைரலான நிலையில் இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காதல், நகைச்சுவை ஜர்னரில் உருவாகியுள்ள இப்படம் நிச்சயம் ரசிகர்களை மகிழ்விக்கும் என தெரிகிறது. சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி ரிலீசாகவுள்ள இப்படத்தைக் காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

பிளடி பெக்கர்

கவின் நடிப்பில் இயக்குனர் சிவபாலன் இயக்கத்தில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் பிளடி பெக்கர். இப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி வைரலானது. அதில் கவினின் நடிப்பும் பேசப்பட்டது. இந்த நிலையில் ஸ்டார் படத்திற்கு பின் கவின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படமும் வித்தியாசமான கதையம்சத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்படமும் தீபாவளி ரேஸில் மற்ற படங்களுக்கு டப் கொடுக்கும் என தெரிகிறது.

லக்கி பாஸ்கர்

துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி, ராம்கி, சூர்யா சீனிவாசா ஆகியோர் நடிப்பில், வெங்கி அத்லூரி இயக்கத்தில், ஜிவி. பிரகாஷ்குமார் இசையில் தெலுங்கில் உருவாகியுள்ள இப்படத்தை சித்தாரா நிறுவனம் தயாரித்துள்ளது. காதல் மற்றும் திரில்லர் பாணியில் மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில் துல்கர் சல்மானுக்கு மனைவியாக மீனாட்சி செளத்ரி நடித்திருக்கிறார். வரும் தீபாவளிக்கு வெளியாகும் இப்படத்தைக் காணவும் ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

கா

கிரண் அப்பாரவம், தன்வி ராம் நடிப்பில், சுஜித் மற்றும் சந்தீப் இயக்கத்தில், சிந்த கோபாலகிருஷ்ண ரெட்டி தயாரிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு படம் கா. காமெடி, ஆக்சன் ஜர்னரில் வித்தியாசமான கதையம்சத்துடன் உருவாகியுள்ள இப்படத்தில் டிரைலர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி பல லட்சம் பார்வைகளைப் பெற்றது. இந்த நிலையில் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ளது.

ஜீப்ரா

சத்யதேவ், ஊர்வசி ரவ்துலா, தனஞ்செயா, சத்யராஜ், பிரியா பவானி சங்கர், அம்ருதா ஐயங்கர் ஆகியோர் நடிப்பில், ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில், ஓல்ட் டவுன் புரடக்சன் மற்றும் பத்மா பிலிம்ஸ் இணைந்து தயாரித்து படம் ஜீப்ரா. இப்படத்திற்கு கேஜிஎப் புகழ் ரவி பசூர் இசையமைத்துள்ளார். தெலுங்கில் மொழியில் உருவாகியுள்ள இப்படமும் தீபாவளி ரேஸில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பகீரா

ஸ்ரீ முரளி, ருக்மணி வசந்த், பிரகாஷ் ராஹ், ரகு உள்ளிட்டோர் நடிப்பில், டி.ஆர்.சூரி இயக்கத்தில் கன்னடத்தில் உருவாகியுள்ள படம் பகீரா. இப்படத்திற்கு கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல் கதை எழுதியுள்ளார். காந்தரார பட புகழ் இசையமைப்பாளர் அஜனீஸ் லோகேஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் சிங்கில் ருத்ர தாரா நேற்று வெளியான நிலையில், வரும் தீபாவளிக்கு ரசிகர்களை மிரட்ட வருகிறது இப்படம்.

பூல் புலையா 3

கார்த்திக் ஆர்யன், திரிப்தி டிம்ரி, வித்யா பாலன், மாதுரி தீக்சித், விஜய் ராஸ், ராஜ்பால் யாதவ் ஆகியோர் நடிப்பில், அனீஸ் பாம்சி இயக்கத்தில், சந்தீப் சிரோக்தர், அமல் மாலி, ஆகியோர் இசையமைப்பில் ஹிந்தியில் உருவாகியுள்ள படம் பூல் புலையா 3. ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் வரும் தீபாவளிக்கு விருந்தாக வருகிறது. ஏற்கனவே இதன் 2 பாகங்கள் சூப்பர் ஹிட்டான நிலையில் இப்படமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வசூல் குவிக்கும் என தெரிகிறது.

தீபாவளி ரேஸில் மோதும் 8 படங்கள்

முன்னணி நடிகர்களின் படங்கள் இந்த தீபாவளிக்கு ரேசில் கலந்துகொள்ளவில்லை என்றாலும் இந்த 8 படங்களும் ரசிகர்களின் பெரும் பொழுதுபோக்காக நிச்சயம் இருக்கும் என தெரிகிறது. இதில் தமிழிலில் 3 படங்களும், தெலுங்கில் 3 படங்களும், கன்னடத்தில் ஒரு படமும், இந்தியில் ஒரு படம் என மொத்தம் 8 படங்கள் தீபாவளிக்குத் தியேட்டரில் ரசிகர்களுக்கு விருந்தாக வரவுள்ளது. இதில் எந்தப் படம் வசூல் குவித்து ரேஸில் ஜெயிக்கப் போகிறதோ என ரசிகர்கள் இப்போதே கணக்குப் போடத் தொடங்கிவிட்டனர்.

Trending News