ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

இந்த வார டிஆர்பி-யை அடித்து நொறுக்கிய டாப் 6 சீரியல்கள்.. வருட இறுதியில் முட்டி மோதும் சன், விஜய் டிவி

This week’s TRP ratings: இன்னும் சில தினங்களில் புத்தாண்டு துவங்க இருப்பதால் வருட இறுதியில் டிஆர்பி-யில் சன் மற்றும் விஜய் டிவி சேனல்கள் முட்டி மோதிக் கொள்கின்றனர். அதில் டாப் 6 இடத்தை பிடித்த சீரியல்களின் லிஸ்ட் வெளியாகி இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.

இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் விஜய் டிவியின் ஆஹா கல்யாணம் சீரியல் 10-வது இடத்திலும், பாக்கியலட்சுமி 9-வது இடத்திலும் உள்ளது. 8-வது இடம் சன் டிவியின் ஆனந்த ராகம் சீரியலுக்கு கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து 7-வது இடத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் உள்ளது.

6-வது இடம் சன் டிவியின் இனியா சீரியலுக்கு கிடைத்திருக்கிறது. 5-வது இடத்தில் அண்ணன் தங்கையின் பாச போராட்டத்தை காண்பிக்கும் வானத்தைப்போல சீரியல் உள்ளது. 4-வது இடத்தில் எதிர்நீச்சல் உள்ளது. இதில் நான்கு மருமகள்கள் தங்களுடைய சுயமரியாதையை நிலை நிறுத்த போராடுகின்றனர்.

Also Read: ஹனிமூன்-க்கு குடும்பத்துடன் போகும் ஜோடி.. ஏழு ஜென்மம் எடுத்தாலும் பாண்டியன் திருந்தவே மாட்டார் போல

இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட்

இருப்பினும் இரண்டு வருடங்களாக இந்த சீரியலில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் முதலில் டாப் லிஸ்டில் இருந்த எதிர்நீச்சல் இப்போது 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 3-வது இடத்தில் கலெக்டராக மாஸ் காட்டிக்கொண்டிருக்கும் சுந்தரி சீரியல் இருக்கிறது.

2வது இடத்தில் கயல் உள்ளது. ஒரு பிரச்சனை முடிவதற்குள் அடுத்த பிரச்சினை கயலுக்கு அடுக்கடுக்காய் வருகிறது. மொத்த பாரத்தையும் அவர் தன்னுடைய குடும்பத்திற்காக சுமந்து போராடிக் கொண்டிருக்கிறார்.

முதல் இடத்தில் சிங்கப்பெண்ணே சீரியல் உள்ளது. இதில் சில்வண்டு போல் இருக்கும் ஆனந்தி சிங்கம் போல் அவ்வப்போது சீறி, சீரியலை மேலும்மேலும் விறுவிறுப்பாக்குவதால் இந்த சீரியல்தான் இப்போது சின்னத்திரை ரசிகர்களின் பேவரைட் சீரியலாக மாறிவிட்டது.

Also Read: பிக் பாஸ் 7ல் வின்னர், ரன்னர் இவர்கள்தான்.. டாப் 5 லிஸ்ட் ரெடி

Trending News