திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

திருமணமாகாமல் லிவிங் டு கெதர் வாழ்க்கை.. 18 வயதில் வந்த கனவை நிஜமாக்கிய பிரியா பவானி சங்கர்

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலின் மூலம் சின்னத்திரையில் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த பிரியா பவானி சங்கர் தற்போது தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் கட்டிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் பிரியா பவானி சங்கர் திருமணத்திற்கு முன் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் காதலனோடு புகைப்படம் வெளியிட்டு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்திருக்கிறார்.

அதிலும் 18 வருடங்களுக்குப் பிறகு அவருடைய ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் இருப்பதாகவும் மனம் திறந்து பேசி உள்ளார். பிரியா பவானி சங்கர் அவருடைய காதலன் ராஜவேல் என்பவரோடு கடற்கரையில் எடுத்த நெருக்கமான புகைப்படங்களை பதிவிட்டு, தங்கள் 18 வருடங்களாக கடற்கரை பக்கத்தில் பார்த்து ரசித்த ஒரு இடத்தில் புது வீடு கட்டி இருக்கிறோம். இங்கே இருந்து நிலவையும் கடலையும் ரசிக்க போகிறோம் என்று அந்த புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

Also Read: ரொம்ப காட்ட முடியாது என பெயரை கெடுக்காமல் இருக்கும் 5 நடிகைகள்.. சேலையில் கிறங்கடிக்கும் பிரியா பவானி சங்கர்

மேலும் இளைஞர்களின் கனவு கண்ணியாக இருக்கும் பிரியா பவானி சங்கர் காதலனுக்கு முத்தம் கொடுப்பது போன்றும், இருவரும் கட்டிப் பிடித்து இருப்பது போன்றும் நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை பீல் வைத்திருக்கிறார்.

காதலனோடு புகைப்படம் வெளியிட்ட பிரியா பவானி சங்கர்

priya-bhavani-shankar-cinemapettai
priya-bhavani-shankar-cinemapettai

சமீபத்தில் அருண்விஜய் நடிப்பில் வெளியான யானை படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து தனுஷ் நடிப்பில் தற்போது திரையரங்கில் வசூல் வேட்டை ஆடிக் கொண்டிருக்கும் திருச்சிற்றம்பலம் படத்திலும் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். மேலும் கமலஹாசன் நடிப்பில் வெளியாகவுள்ள இந்தியன் 2 என்ற படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

பிரியா பவானி சங்கர் காதலனுக்கு முத்தம் கொடுத்த புகைப்படம்

priya-bhavani-shankar-1-cinemapettai.jpg
priya-bhavani-shankar-1-cinemapettai.jpg

Also Read: பெங்களூர் தக்காளி போல் மாறிய பிரியா பவானி சங்கர்.. ஜெர்மனியில் இருந்து வெளியான புகைப்படங்கள்

Trending News