திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

2028 இல் வெளிவர உள்ள லோகேஷின் கடைசி படம்.. ஆண்டவரிடம் சரணாகதி அடையும் பிரம்மாண்ட கணக்கு

தற்போது கோலிவுட்டின் மாபெரும் தூணாக விளங்கக்கூடிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது லியோ படத்தை நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாக்கி வருகிறார். வரும் அக்டோபர் மாதம் ரிலீஸாக உள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. மேலும் இப்படம் லோகேஷின் முந்தைய படங்களான கைதி,விக்ரம் உள்ளிட்ட தொடர் கதையாக உருவாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யூனிவெர்சில் உருவாகி வரும் லியோ படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மன்சூர் அலிகான், அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் முதன்முறையாக லோகேஷின் இயக்கத்தில் இப்படத்தில் இணைந்துள்ள நிலையில், ஏற்கனவே விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் மிரட்டிய சூர்யாவும் இப்படத்தில் உள்ளார் என்று கூறப்படுகிறது.

Also Read: என்னது லியோ இன்னும் போனியே ஆகலையா.? ஒதுங்கிய ரெட் ஜெயண்ட், பீதியில் இருக்கும் லோகேஷ்

மேலும் லியோ படத்தில் 99 சதவிகிதம் கமலஹாசனின் விக்ரம் கதாபாத்திரமும் சில நிமிடங்கள் வரும் என தற்போது புது தகவல் வெளியாகி பலருக்கும் ஆச்சரியத்தை தந்துள்ளது. இதனிடையே லோகேஷ் கனகராஜ் ஒருமுறை, தான் 10 படங்கள் மட்டும் தான் இயக்குவேன். அதுவே எனக்கு போதுமானது என கூறி அதிர்ச்சி அளித்தார். ஏற்கனவே இவர் 5 படங்கள் வரை இயக்கிய நிலையில், இன்னும் 5 படங்கள் தான் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளது இதன் மூலம் உறுதியாகி உள்ளது.

அதில் ரோலக்ஸ், கைதி 2, விக்ரம் 3, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கடைசி படம் என லோகேஷ் கனகராஜ் 4 படங்களின் பட்டியலை வைத்துள்ளார். இதற்கு நடுவில் நடிகர் அஜித், தனுஷ், விக்ரம், சிம்பு என மொத்த கோலிவுட் நடிகர்களையும் தன் எல்.சி.யூவில் இணைய வைக்கலாம் என லோகேஷ் கனகராஜ் பெரிய பிளான் ஒன்றை போட்டு வருகிறார்.

Also Read: ஜெயிலரின் வெற்றியை மறக்கடிக்க களமிறங்கும் லியோ.. லோகேஷ்-க்கு தளபதி போட்டோ ஆர்டர்

இதனிடையே லோகேஷ் கனகராஜின் கடைசி படம் எது, அதில் யார் நடிக்கப்போகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் தீவிரமான கமல் ரசிகர் என்பதால் அவரது விக்ரம் 3 படத்தை தான், தன் கடைசி படமாக எடுக்க லோகேஷ் கனகராஜ் திட்டம் தீட்டியுள்ளாராம். விக்ரம் படம் வந்தவுடன் இப்படத்தின் அடுத்த பாகம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் ஆர்வமுடன் இருந்தனர்.

இந்நிலையில், இதுதான் லோகேஷ் கனகராஜின் கடைசி படமாக இருக்கும் என்பதால் எல்லா நடிகர்களும் விக்ரம் 3 படத்தில் ஒன்றாக நடித்து கமலின் தலைமையில் வில்லன்களை போட்டு தள்ளும் வகையில் இப்படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படம் 2028 ஆம் ஆண்டில் ரிலீஸ் செய்யவும் லோகேஷ் கனகராஜ் பிளான் போட்டுள்ளார்.

Also Read: 99.9% உறுதி ஆயிடுச்சு.. சிஷ்யனுக்காக களமிறங்கிய கமல், லியோ செய்யப் போகும் சம்பவம்

Trending News