சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

எவ்வளவு கேவலப்பட்டாலும் பரவால்ல.. ஆண்டவருக்காக ரொமான்டிக் அவதாரம் எடுத்த லோகேஷ், காரணம் இதுதான்

Lokesh Kanagaraj: லோகேஷ் நடிக்கப் போகிறார் என்றதுமே அனைவருக்கும் ஒரு ஆர்வம் இருந்தது. ஆனால் இனிமேல் ஆல்பம் பாடல் டீசரை பார்த்ததும் அது ஆனந்த அதிர்ச்சியாக மாறிப்போனது.

நம்ம லோகியா இது என கேட்கும் அளவிற்கு அவர் ரொமான்ஸில் பட்டையை கிளப்பி இருந்தார். அதை தொடர்ந்து இன்று முழு பாடலும் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது.

அதே நேரத்தில் சில விமர்சனங்களும் இருந்தது. உங்கள் ஹீரோவுக்கு ஒரு நியாயம். உங்களுக்கு ஒரு நியாயமா? என வெளிப்படையான கமெண்ட்டுகளும் வந்தது. அதற்கு லோகேஷ் தற்போது ஒரு விளக்கம் அளித்துள்ளார்.

அதாவது லியோ பட கிளைமாக்ஸில் ஆண்டவர் குரல் கொடுத்திருப்பார். லோகேஷ் அதை முதலில் சொன்ன போது கமல் எந்த மறுப்பும் சொல்லவில்லையாம்.

ஆண்டவருக்காக சம்மதித்த லோகேஷ்

அன்று மாலையே டப்பிங் பேச வந்திருக்கிறார். அதேபோல் மறுநாள் காலையும் வந்து ஐந்து மொழிக்கும் சேர்த்து பேசி கொடுத்து விட்டாராம். கமல் நினைத்திருந்தால் முடியாது என்று சொல்லி இருக்கலாம்.

ஆனால் லோகேஷ் கேட்டதற்காகவே சம்மதித்திருக்கிறார். அதனாலேயே அவர் இந்த ஆல்பம் பாடலில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.

இதனால் விமர்சனங்கள் வரும் என்று தெரிந்தும் கூட சம்மதித்திருக்கிறார். அதற்கு முக்கிய காரணம் தன் குரு மேல் வைத்திருக்கும் அன்பு மட்டுமே.

Trending News