லோகேஷ், அனிருத்துக்கு வலை விரிக்கும் நடிகர்.. தும்பை விட்டு வாலை பிடிக்கும் சாக்லேட் பாய்

Lokesh, Anirudh : டாப் ஹீரோக்கள் முதல் வளர்ந்து வரும் ஹீரோக்கள் வரை லோகேஷின் படத்தில் நடித்து விட வேண்டும் என்று ஆசையில் இருக்கிறார்கள். அந்த வகையில் சாக்லேட் பாய் ஒருவர் ஹிட் கொடுத்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆகிறது. இப்போது அவர் படங்களில் நடிக்கிறாரா என்பதே தெரியவில்லை.

மேலும் பெரிய படத்தின் வாய்ப்புகள் வந்தாலும் அலட்சியத்தின் காரணமாக அவற்றை உதாசீனப்படுத்தி விட்டார். அதோடு மட்டுமல்லாமல் நடிகர் நடித்த படங்களில் டப்பிங் பேச வராததால் ரிலீஸ் தள்ளிப்போனது. இப்போது தும்பை விட்டுவிட்டு வாலை பிடிக்கிறார் நடிகர் அரவிந்த்சாமி.

அதாவது தொடர்ந்து அவர் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருந்தார். இப்போதைக்கு அவரது மார்க்கெட்டை வேற லெவல் இருந்திருக்கும். ஆனால் தும்பை விட்டு வாலை பிடிக்கும் கதையாக இப்போது பெரிய ஹீரோக்களை நாடி கொண்டிருக்கிறார். இந்த வகையில் லோகேஷ் மற்றும் அனிருத் கூட்டணி தான் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

Also Read : கேமியோ கேரக்டருக்கு களம் இறங்கிய லோகேஷ்.. நடிப்புக்கு போட்ட முதல் பிள்ளையார் சுழி

இப்போது இரண்டு பேரிடம் வாய்ப்புக்காக அரவிந்த்சாமி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். மேலும் இது தவிர பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் மெய்யழகன் படத்தில் கார்த்திக்கு வில்லனாக அரவிந்த்சாமி நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது தொடங்கியுள்ளது.

மேலும் லோகேஷ் அடுத்ததாக ரஜினியின் படத்தை இயக்க உள்ளதால் அரவிந்த்சாமிக்கு அதில் வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே ரஜினி, அரவிந்த்சாமி இருவரும் இணைந்து தளபதி படத்தில் நடித்திருந்தனர். மீண்டும் இவர்கள் இணைந்தால் தாறுமாறாக தான் இருக்கும்.

Also Read : மார்க்கெட்டில் விலை போகாமல் கிடப்பில் கிடக்கும் 5 படங்கள்.. எதுக்கும் அசராமல் கேரியரை தொலைத்த அரவிந்த்சாமி