வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வாய்ப்பும், வெற்றியும் எளிதாய் கிடைத்ததால் வரும் கர்வம்.. லோகேஷ், எச். வினோத் அடாவடி பேச்சு

Directors Lokesh and H.Vinoth: எப்படியாவது சினிமாவில் இயக்குனராக முத்திரையை பதித்து விடலாம் என்ற ஏக்கத்தில் பலரும் போராடி வருகிறார்கள். அந்த வகையில் லோகேஷ் மற்றும் எச் வினோத் இவர்களுடைய திறமையை நிரூபிக்க ஒரு வழி பிறக்காதா என்று ஏங்கி கொண்டிருந்தார்கள் .

அந்த சமயத்தில் இவர்களுக்கான வாய்ப்பு கிடைத்தது. அத்துடன் இவர்களின் எதிர்பார்ப்பையும் தாண்டி இவர்களுக்கு பேரும் புகழும் கொடிக்கட்டி பறந்து வருகிறது. ஆனால் தற்போது இவர்கள் சொன்ன விஷயங்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது.

Also read: அவரைப் பார்த்து கேடுகெட்ட பழக்கத்தை விட்ட வெற்றிமாறன்.. திரும்ப சொல்லிக் கொடுக்கும் லோகேஷ்

அதாவது சமீபத்தில் லோகேஷ் அளித்த பேட்டியில் 10 படம் இயக்கி முடித்துவிட்டு சினிமாவில் இருந்து நான் விலகி விடுவேன் என்று கூறியிருக்கிறார். இதே மாதிரி எச் வினோத்தும் அவருடைய இயக்கத்தில் ஐந்து படங்களை எடுத்த பின்பு சினிமாவில் இருந்து நான் ரெஸ்ட் எடுத்துக் கொள்வேன் என்று கூறியிருக்கிறார்.

இப்படி இவர்கள் இருவரும் சினிமாவிற்குள் நுழைந்த குறுகிய காலத்தில் அதிகமாக சம்பாதித்தால் அந்த லாபமே போதும் என்று ஒதுங்கிக் கொள்வது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும். தற்போது இளம் இயக்குனர்கள் வளர்ந்து வரும் நிலையில் இந்த மாதிரி எண்ணத்தை அவர்களுக்கு திணிப்பதால் ரொம்பவே சலிப்பை ஏற்படுத்துகிறது.

Also read: லோகேஷ் இடம் இந்த ஸ்டைல் வியப்பா இருந்துச்சு.. விஜய்யின் அப்பா கூறிய சீக்ரெட்

அத்துடன் இவர்கள் செய்வதை பார்க்கும் பொழுது ரொம்ப காலமாய் சினிமாவில் போராடிக் கொண்டு, ஜெயிக்க முடியாமல் தவித்து வரும் இயக்குனர்களை நினைக்கும் போது தான் ரொம்பவே வருத்தமாக இருக்கிறது.

இவர்களுக்கெல்லாம் கிடைக்காத வாய்ப்பு லோகேஷ் மற்றும் எச் வினோத்துக்கு கிடைத்ததால் அதனுடைய அருமை இவர்களுக்கு புரியவில்லை. பொதுவாக யாராக இருந்தாலும் வாய்ப்பும் வெற்றியும் எளிதாக கிடைத்தால் அதனுடைய மகத்துவம் அவர்களுக்கு புரியாமல் போய்விடும் என்று சொல்வார்கள். அந்த நிலையில் தான் தற்போது இவர்கள் இருவரும் இருக்கிறார்கள்.

Also read: துணிவுக்கு பின் லோகேஷ் உடன் நேரடியாக மோதும் எச் வினோத்.. யாரும் எதிர்பார்க்காத மெர்சல் கூட்டணி

Trending News