செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

தளபதி 67க்கு மொத்த ஃபிளானும் ரெடி.. ஆறு மாசம் அட்ராசிட்டி பண்ண போகும் லோகேஷ், விஜய்

வாரிசு பேக் பண்ணி வச்சாச்சு இனிமேல் ரிலீஸ் தான். ஆடியோ லான்ச் வரை எல்லாம் முடித்துக் கொடுத்து விட்டார் விஜய். இப்பொழுது கொஞ்சம் ஓய்வு. புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிந்தபின்பு அடுத்த புராஜெக்ட்டை கையில் எடுக்கிறார் விஜய். ஏற்கனவே இதைப் பற்றி ஒரு கம்ப்ளீட் டேட்டாபேஸ் போட்டு வைத்துள்ளனர்.

முதல்கட்டமாக தளபதி 67 படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கவிருக்கிறது. பிரசாத் ஸ்டூடியோவிலும், ரகுமான் லேப்பிலும் நடத்த திட்டம் போட்டிருக்கின்றனர். இதில் விஜய் சிறிது ஓய்வுக்குப் பின் நடிக்கவிருக்கிறார். முதற்கட்ட சூட்டிங் வருகிற ஜனவரி 2ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

Also read:  விஜய்க்கும், அஜித்துக்கும் இதுதான் வித்தியாசம்.. துணிவை உதாசீனப்படுத்தும் வாரிசு படக்குழு

சென்னையில் கிட்டத்தட்ட ஜனவரி இரண்டாம் தேதியிலிருந்து ஒரு மாதம் ஷூட்டிங் நடைபெற இருக்கிறதாம். அதன்பின் காஷ்மீர் செல்ல இருக்கிறார்கள். காஷ்மீரில் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஷூட்டிங் நடக்க இருக்கிறதாம். ஏனென்றால் காஷ்மீரில் பனிப்பொழிவு கொஞ்சம் ஜாஸ்தியாக இருப்பதால் அதற்கு மட்டும் நெடுநாள் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம் விஜய்.

காஷ்மீர் ஷூட்டிங் முடிந்தவுடன் வெளிநாடு செல்ல இருக்கிறார்களாம். வெளிநாட்டில் கிட்டத்தட்ட ஒரு மாதம் படப்பிடிப்பு. இப்படி கிட்டத்தட்ட இந்த படத்தின் முழு திட்டங்களையும் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே திட்டம் போட்டு வைத்துள்ளனர்.

Also read: ஒவ்வொரு பாடலும் வேற லெவல்.. இணையதளத்தை திணறடிக்கும் வாரிசு

விஜய் எப்பொழுதுமே கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு லண்டன் செல்வது வழக்கம், இந்த முறை அவர் லண்டன் செல்ல வில்லை. வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்ததால் அவர் லண்டன் செல்லும் ப்ரோக்ராமை தள்ளி வைத்துவிட்டார்.

எனினும் அவர் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக லண்டன் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுக்கும் இப்பொழுது வாய்ப்பு இல்லை ஏனென்றால் தளபதி 67 படத்தின் சூட்டிங் இரண்டாம் தேதி சென்னையில் ஆரம்பிக்க இருக்கிறார்கள். அதனால் இந்த முறை விஜய் புத்தாண்டு, சென்னையில்தான் கொண்டாடுகிறார்.

Also Read : அந்த ஒரு விஷயத்தில் தான் ஜாதி கிடையாது.. வாரிசு ஆடியோ லான்ச்சில் விஜய்யின் அனல் பறக்கும் பேச்சு

Trending News