வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தலைவர்-171 போஸ்டர் ரிலீஸால் கடும் கோபத்தில் லோகேஷ்.. நாலா பக்கமும் லாக் செய்யும் சன் பிக்சர்ஸ் மாறன்

Thalaivar – 171 Movie Poster released by Sun pictures: லோகேஷ் கனகராஜ் இந்தியாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக வளர்ந்து வந்து கொண்டிருக்கிறார். இவரை வைத்து படம் தயாரிப்பதற்கும், இவர் படத்தில் நடிப்பதற்கும் இந்தியா முழுவதும் காத்திருக்கின்றனர். தற்போது விஜய் நடிக்கும் லியோ படத்தை முடிக்கும் தருவாயில் இருக்கிறார்.

இவர் அடுத்து என்ன படம் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு எப்பொழுதுமே இருக்கும் அதனால் அடுத்து கைதி 2 அல்லது விக்ரம் அல்லது ரோலக்ஸ் எந்த படத்தை இயக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது. அதுபோல ரஜினியை வைத்து இயக்கப் போகிறார் என்ற செய்திகள் அவ்வப்போது வலம் வந்து கொண்டிருந்தன.

Also Read : நம்ப ஹீரோக்களை ஏமாற்றும் லோகேஷ் கனகராஜ்.. திடீரென அக்கட தேசத்துக்கு தாவுவதால் வரும் பிரச்சனை

சில பேர் ரஜினிக்கும், லோகேஷ் கனகராஜ் இருவருக்கும் பிரச்சனை என பல தேவையில்லாத செய்திகளை பரப்பி வந்தனர். திடீரென தலைவர் 171 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என அதிகார பூர்வ அறிவிப்பு வெளிவந்தது. இதை பார்த்ததும் ரஜினி ரசிகர்கள் அனைவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் இதைப் பற்றி இன்னும் லோகேஷ் கனகராஜ் ஒரு வார்த்தை பேசவில்லை காரணம் அவருக்கு இந்த அறிவிப்பு பிடிக்கவில்லையாம். ரஜினி பட அறிவிப்பை லியோ படம் வெளியிட்ட பின்னர் அவரது ஸ்டைலில் அறிவிக்க ஆசைப்பட்டாராம். அதனால் பல யோசனைகளை மனதில் வைத்து காத்திருந்தாராம். திடீரென சன் பிக்சர்ஸ் லோகேஷ் கனகராஜுக்கு முதல் நாள் இரவு ஃபோன் செய்து அடுத்த நாள் காலை இந்த படத்தின் அறிவிப்பை வெளியிடப் போகிறோம் என்று கூறியுள்ளனர்.

Also Read : புது அவதாரம் எடுத்த லோகேஷ் கனகராஜ்.. பெரிய கேள்விக்குறியில் அடுத்தடுத்து கமிட் ஆன படங்கள்

எந்த பதிலும் தெரிவிக்க முடியாமல் அமைதி காத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். அவர்கள் சொன்ன மாதிரி அடுத்த நாள் காலை வெளிவந்தது இதில் முழு அப்சட்டில் உள்ளாராம் லோகேஷ் கனகராஜ். தன் படம் தன்னை மீறி தான் சொல்வதைக் கேட்காமல் அறிவிப்பு வந்ததை அவர் ஏற்கவில்லை. இதற்கு காரணம் சன் பிக்சர்ஸ் அவர்கள் எது நினைத்தாலும் செய்துவிடுவார்கள் யாரும் கேட்க முடியாது என்ற நிலைமை.

லியோ படத்தின் அறிவிப்பை எப்படி அவர் நினைத்த மாதிரியே ரசிகர்களுக்கு கொடுத்தார் அது எப்படி பரபரப்பாக பேசப்பட்டது. அதை தாண்டி ரஜினி படத்தை அறிவிப்பை வெளியிட ஆசைப்பட்டார் அதை சுக்கு நூறாக்கிவிட்டது சன் பிக்சர்ஸ். தெரியாமல் இந்த படத்தில் சேர்ந்து விட்டோம் எப்படியாவது முடிக்க வேண்டும் என்ற நினைப்பில் இருக்கிறாராம். ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள பிரச்சனையா என பலர் கேட்டு வருகின்றனர். இது மாதிரி நாலா பக்கமும் சன் பிக்சர்ஸ் லாக் செய்து வருவதால்  இரு கொள்ளி எறும்பாக மாட்டி முழிக்கும் லோகேஷ்.

Also Read : லோகேஷ் கனகராஜ் இயக்கி, வசூலில் தெறிக்கவிட்ட 5 படங்கள்.. கொஞ்ச நாளில் 500 கோடியை தொட்டுப் பார்த்த மனுஷன்

Trending News