திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

20 வருடங்கள் LCU பயணம் தொடருமா?. லோகேஷின் ஆசை இதுதான்

Director Lokesh Kanagaraj: லோகேஷ் கனகராஜ் ஆரம்பத்தில் குறும்படம் இயக்கி வந்த நிலையில் மாநகரம் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் இயக்குனர் அவதாரம் எடுத்தார். இப்போது டாப் நடிகர்கள் விரும்பும் இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதற்கு காரணம் அவர் தனது படங்களில் காட்டும் வித்யாசமான முயற்சி தான்.

அதாவது விக்ரம் படத்தில் தன்னுடைய கைதி படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்களை வைத்திருந்தார். இதன் தொடர்ச்சியாக லியோ படத்தில் இப்போது லோகேஷின் எல்சியு தொடருமா என்ற கேள்விக்கு படத்தில் பாருங்கள் என சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார். கண்டிப்பாக இதில் விக்ரம் கதாபாத்திரங்கள் இடம்பெறும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.

Also Read : வெளியில் கசிந்த லோகேஷ் ரஜினி பட அப்டேட்.. தலைவர் கொடுத்த செம ஐடியா

இந்நிலையில் இன்னும் 20 வருடங்கள் லோகேஷ் கனகராஜ் தனது எல்சியு பயணத்தை தொடர்வாரா என சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு லோகேஷ் தனது ஆசையை கூறி இருக்கிறார். அதாவது இன்னும் பத்து வருடங்கள் மட்டுமே படத்தை இயக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.

ஆகையால் இன்னும் ஒரு பத்து படங்கள் முடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகிடுவேன் என்பது போல கூறி இருக்கிறார். இதைக் கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தனித்துவமான இயக்குனர்களில் ஒருவரான லோகேஷின் சினிமா பயணம் இன்னும் 50 வருடங்கள் தொடர வேண்டும் என ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

Also Read : கன்னட நடிகரை கொக்கி போட்டு இழுக்கும் லோகேஷ்.. கமுக்கமாக கட்டளை போட்ட ரஜினி

இப்போது லியோ படத்தை முடித்த கையுடன் அடுத்ததாக விக்ரம் 2, கைதி 2 போன்ற படங்கள் வரிசை கட்டி நிற்கிறது இருக்கிறது. அதுமட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தையும் லோகேஷ் இயக்க இருக்கிறார். இவ்வாறு ரசிகர்களின் எதிர்பார்ப்பு லோகேஷ் மீது நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது.

இந்த சூழலில் திடீரென பத்து வருடங்களிலேயே தனது திரை வாழ்க்கையை லோகேஷ் முடித்துக் கொள்கிறார் என்பது வேதனை அளிக்கும் விஷயமாக இருக்கிறது. கண்டிப்பாக இன்னும் பல வருடங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை லோகேஷ் கொடுக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

Also Read : வாய்ப்புக்காக செண்டிமெண்டாக உருட்டும் இயக்குனர்.. செத்தால் லோகேஷ் படத்துல தான் சாவாராம்

Trending News