வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

நெல்சனுக்கு கார் வரும்னு பார்த்தா லோகேஷ் மிரள விட்ட பி.எம்.டபிள்யூ.. விலையை கேட்டா தலைய சுத்துது

Lokesh Kanagaraj: லோகேஷ் இப்போது லியோவில் மிகவும் பிசியாக இருக்கிறார். விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் இப்படத்தில் திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கின்றனர். இதுவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் படத்தில் ரசிகர்கள் எதிர்பாராத பல ஆச்சரிய சம்பவங்களும் இருக்கிறதாம்.

அந்த வகையில் லியோ இதுவரை இல்லாத அளவுக்கு வசூல் சாதனை படைக்க தயாராகி விட்டதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் லோகேஷ் விலை மதிப்புள்ள கார் ஒன்றை வாங்கி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Also read: லோகேஷ் பட வில்லனா செத்திடுவாங்கன்னு தெரிஞ்சு, நடிக்க ஆசைப்படும் 4 ஹீரோக்கள்.. ஆசை யாரை விட்டுச்சு!

ஏனென்றால் விக்ரம் படம் முடிந்த கையோடு கமல் அவருக்கு ஒரு காஸ்ட்லி காரை வாங்கி பரிசளித்து இருந்தார். அதைத்தொடர்ந்து தற்போது அவர் 1.70 கோடி மதிப்பிலான பி.எம்.டபிள்யு 7 சீரிஸ் காரை வாங்கி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

அது குறித்த போட்டோ தான் இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் லியோ படம் வெளியான பிறகு தயாரிப்பாளரே உங்களுக்கு வாங்கி கொடுத்திருப்பார். அவசரப்பட்டு இப்போது காரை வாங்கி இருக்கிறீர்களே என கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

Also read: அடுத்தடுத்து 4 பட தோல்வியால் லோகேஷ் இடம் சரணடைந்த மாஸ் ஹீரோ.. விட்டுக் கொடுத்த ரோல்க்ஸ் சூர்யா

மேலும் சில ரசிகர்கள் நெல்சா உங்க பரிசு எங்க காணோம் என கிண்டலாகவும் கேட்டு வருகின்றனர். சமீபத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கி இருந்த ஜெயிலர் ஆரவாரமாக வெளியானது. அதைத்தொடர்ந்து வசூலும் இதுவரை இல்லாத அளவுக்கு பாக்ஸ் ஆபிஸை மிரட்டிக் கொண்டிருக்கிறது.

லோகேஷ் வாங்கிய பிரம்மாண்ட கார்

lokesh-new-car
lokesh-new-car

இதனால் உச்சி குளிர்ந்து போன சன் பிக்சர்ஸ் நெல்சனுக்கு பல கோடி மதிப்பிலான கார் ஒன்றை பரிசளிப்பதற்கு தயாராகி வருகிறது. அதை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு லோகேஷ் மிரள வைக்கும் சர்ப்ரைசை கொடுத்திருக்கிறார். அந்த வகையில் அவர் வாங்கி இருக்கும் இந்த விலைமதிப்புள்ள காரின் புகைப்படம் சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது.

Also read: தாறுமாறாக உருவாகும் தளபதி 68 கதை.. விஜய்யின் அரசியலுக்கு ஏற்றபடி மாற்றியமைக்கும் வெங்கட் பிரபு

Trending News