புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

லோகேஷ் கூப்பிட்டும் கதாபாத்திரம் பிடிக்கலைன்னு நோ சொன்ன நடிகர்..விசாரித்துப் பார்த்தால் கமலுடன் டிஷ்யூம்

Director Lokesh Kanagaraj: தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யின் லியோ படத்தை இயக்கி வரும் நிலையில், வரும் அக்டோபர் மாதம் இப்படத்தை ரிலீஸ் செய்வதற்கு படக்குழு ஆயத்தமாகி வருகிறது. மேலும் இம்மாதம் கடைசியில் லியோ படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியை நடத்தவும் படக்குழு பிளான் செய்து வருகின்றனர். இத்திரைப்படம் ரிலீஸாவதற்கு முன்பாகவே 300 கோடிக்கு மேல் ப்ரீ பிசினஸ் ஆகி புது சாதனையையே படைத்துள்ளது.

இதற்கு காரணம் பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக இருக்கக்கூடிய விஜய் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் லோகேஷ் கனகராஜ் மிக பெரிய காரணமாக பார்க்கப்படுகிறார். ஏனென்றால் இவரது முந்தைய படங்களான மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களின் வெற்றி தான் லியோ படம் ரிலீஸாவதற்கு முன்பே இவ்வளவு கோடிகளை வசூல் செய்ய காரணமாக அமைந்தது.

Also Read: ரஜினி படத்திற்கு நாள் குறித்த லோகேஷ் கனகராஜ்.. அப்டேட்டுகளில் அதிரடி கிளப்பும் சூப்பர் ஸ்டார்

இதனாலேயே லோகேஷின் இயக்கத்தில் நடிக்க வேண்டுமென பல பிரபலங்கள் லைன் கட்டி நிற்கின்றனர். அதிலும் இவர் படத்தில் வில்லனாக நடிப்பதே எங்களது கனவு லட்சியமென சில நடிகர்கள் கூறி வருகின்றனர். அந்த வகையில், பிரபல நடிகர் ஒருவர் லோகேஷ் கனகராஜ் கூப்பிட்டும் விக்ரம் படத்தில் வில்லனாக நடிக்க மறுப்பு தெரிவித்துள்ள செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

உலகநாயகன் கமலஹாசன் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மெகாஹிட்டான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி, சூர்யா, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில், நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட ராகவா லாரன்ஸை விக்ரம் படத்தில் நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் கேட்டுள்ளார். ஆனால் ராகவா லாரன்ஸ் கமலஹாசனை காரணம் காட்டி அப்படத்தில் நடிக்காமல் விட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: 46 வயதில் பெயர் மாற்ற என்ன காரணமோ.. வெளியில் வரும் ராகவா லாரன்ஸ் பூசிய சாயம்

தற்போது இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் உள்ளிட்டோர் நடிப்பில் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி சந்திரமுகி 2 திரைப்படம் வெளியாகயுள்ளது. 2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து இப்படத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார்.

இதனிடையே ரஜினியின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ், கமலின் விக்ரம் படத்தில் சந்தானம் என்ற விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தில் நடிக்க கூறி லோகேஷ் கனகராஜ் கேட்டுள்ளார். ஆனால் இக்கதாபாத்திரம் மிகவும் கொடுமையாக உள்ளதால், நான் நடித்தால் என்னை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறி மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் அவர் விக்ரம் படத்தில் நடிக்காததற்கு உண்மையான காரணம், ரஜினியின் ரசிகராக ராகவா லாரன்ஸ் உள்ள நிலையில், கமலுடன் நடிக்க அவருக்கு விருப்பமில்லாதது தான் என கோலிவுட் வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.

Also Read: என் ட்ரஸ்டுக்கு பணம் அனுப்பாதீங்க.. ஒரே போடாய் போட்ட ராகவா லாரன்ஸ்

Trending News