சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

லோகேஷ் மட்டுமே யூஸ் பண்ணும் ஆவரேஜ் வசூல் ஹீரோ.. தனுஷ் வாய்ப்பு கொடுத்தும் தெலுங்கு பக்கம் ஓடிய நடிகர்

Director Lokesh kanagaraj : லோகேஷ் கனகராஜ் அந்த காலத்தில் உள்ள நடிகர்கள் சிலரை தேர்ந்தெடுத்து தனது படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க வைத்து வருகிறார். அதன் மூலம் அந்த நடிகர்களுக்கும் இப்போது எக்கச்சக்க வாய்ப்புகள் வருகிறது.

அவ்வாறு தான் சார்லி, மன்சூர் அலிகான் போன்றவர்களுக்கு இப்போது லோகேஷ் தனது படங்களில் வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். அவ்வாறு நல்ல ஆக்சன் ஹீரோவையும் தமிழில் ரசிகர்களிடம் பரிட்சயம் செய்து வைத்தார் லோகேஷ்.

அதாவது யாருடா மகேஷ் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் சந்தீப் கசன். தெலுங்கில் அதிக படங்கள் நடித்து வந்த இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக காரணமாக இருந்த படம் மாநகரம் தான்.

ராயன் படத்தில் சந்தீப் கிஷன்

இதன் பிறகு லோகேஷ் மற்றும் சந்தீப் இருவருமே நெருங்கிய நண்பர்களாகத்தான் இருந்து வந்தார்கள். மேலும் இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ராயல் படத்திலும் சந்தீப் நடித்து வருகிறார்.

இந்த சூழலில் ராயன் படத்தை தவிர தமிழில் இதற்கு வேறு எந்த படங்களும் இல்லை. மேலும் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் சந்தீப் மார்க்கெட் இல்லாத நிலையில் தெலுங்கு பக்கம் சென்று விட்டாராம்.

ஏனென்றால் சந்தீப்புக்கு தெலுங்கு சினிமாவில் எக்கச்சக்க பட வாய்ப்பு வருவதுடன் மார்க்கெட் அதிகம். இதனால் டாப் ஹீரோவுக்கு இணையாக அங்கு போட்டி போட்டு வருகிறார்.

Trending News