செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

தளபதி 67 நடிகையை உறுதிசெய்த லோகேஷ்.. ஏஜென்ட் டீனாவை மிஞ்சும் பவர்ஃபுல் ரோல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் இண்டஸ்ட்ரியல் ஹிட்டடித்த நிலையில் அடுத்ததாக விஜயை வைத்த தளபதி 67 படத்தை இயக்க உள்ளார். இப்படம் முழுக்க முழுக்க லோகேஷ் படமாக எடுக்கவுள்ளார். இந்நிலையை இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது விக்ரம் படத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்திருந்தாலும் அவர்களைத் தாண்டி பெரிதும் பேசப்பட்ட கதாபாத்திரம் ஏஜென்ட் டீனா. எதிர்பாராத நேரத்தில் அவருடைய நடிப்பு பலரையும் பிரமிக்க செய்தது.

Also Read : ஏஜென்ட் டீனாவுக்கு அழைப்பு விடுத்த சூப்பர் ஸ்டார்.. வெறித்தனமாக உருவாகும் புதிய கூட்டணி

மேலும் விக்ரம் படத்தில் நடித்ததை தொடர்ந்து ஏஜென்ட் டீனாவுக்கு நிறைய பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஏஜென்ட் டீனாவை மிஞ்சும் அளவிற்கு பவர்ஃபுல்லான கதாபாத்திரத்தை தளபதி 67 படத்தில் லோகேஷ் வைத்துள்ளார்.

அந்த கதாபாத்திரத்தில் நடிகை திரிஷா தான் நடிக்கவுள்ளார் என்பது 100% உறுதியாகியுள்ளது. மேலும் விஜயுடன் பல படங்களில் ஜோடி போட்டு நடித்துள்ளார் திரிஷா. ஆனால் இப்படத்தில் கொஞ்சம் கூட ரொமான்ஸ் இல்லையாம். முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக எடுக்க உள்ளார் லோகேஷ்.

Also Read : தளபதி-67 பூஜை கூட போடல.. அதுக்குள்ள, ஓடிடி உரிமத்தை பல கோடிக்கு கைப்பற்றிய No.1 நிறுவனம்

ஏற்கனவே தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் திரிஷா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதேபோல் தளபதி 67 படத்திலும் திரிஷாவுக்கு வெயிட்டான கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. ஒரு கதாபாத்திரத்தை எப்படிச் செதுக்க வேண்டும் என்பது லோகேஷ்-க்கு கை வந்த கலை.

அந்த வகையில் கண்டிப்பாக திரிஷாவின் நடிப்பு பசிக்கு சரியான தீனி போடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் வருகைக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தளபதி 67 படத்தில் திரிஷா நடிக்கிறார் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Also Read : பொன்னின் செல்வன் படத்திற்குப் பின் மார்க்கெட்டை பிடிக்கும் த்ரிஷா.. லோகேஷ்க்கு இப்படி ஒரு ஆசையா.?

Trending News