ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

லோகேஷின் பிடியில் இருக்கும் டாப் ஹீரோக்கள்.. அடுத்தடுத்து சர்ப்ரைஸ் தர வரும் 6 படங்கள்

Director Lokesh: தற்போது பெரிதும் எதிர்பார்க்கப்படும் இயக்குனர் யார் என்று கேட்டால் லோகேஷ் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு அவருக்கான ரசிகர்கள் வட்டம் பெருகி இருக்கிறது.

அதனாலேயே அவருடைய அடுத்தடுத்த படங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் தற்போது லோகேஷின் கைவசம் ஆறு படங்கள் உள்ளது.

அத்தனையுமே டாப் ஹீரோக்கள் மற்றும் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் தான். அதில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் தலைவர் 171 விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.

லோகேஷின் பிடியில் இருக்கும் டாப் ஹீரோக்கள்

சூப்பர் ஸ்டாருக்காக தனித்துவமான கதையை உருவாக்கி இருக்கும் லோகேஷ் அடுத்து கார்த்தியை வைத்து கைதி 2 தொடங்க போகிறார். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

மூன்றாவதாக ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் கமலின் விக்ரம் 3 யை இயக்க உள்ளார். அதை அடுத்து கே.வி.என் நிறுவனத்திற்காக பிரபாஸை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார்.

ஐந்தாவதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ராம்சரண், அல்லு அர்ஜுன் இணையும் படத்திற்கும் லோகேஷ் தான் இயக்குனர். ஆறாவதாக 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் லியோ 2 உருவாக உள்ளது.

இப்படி டாப் ஹீரோக்கள் பலரும் லோகேஷின் பிடியில் இருக்கின்றனர். ஆனால் தற்போது விஜய் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். அதனால் லியோ 2 ஆரம்பிக்கப்படுமா என்பது சந்தேகம் தான். இருப்பினும் 2026 தேர்தலுக்குப் பிறகுதான் இது குறித்து தெரிய வரும்.

Trending News