வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அண்ணன் விஜய்யின் பார்முலாவை காப்பி அடிக்கும் லோகேஷ்.. போட்டி போட்டு பணத்தை வாரி இரைக்க திட்டம்

சமீபத்தில் நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி அமைத்து லியோ படத்தில் படு பிஸியாக நடித்து வருகிறார். ஏற்கனவே மாஸ்டர் படத்தில் இணைந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளது. இந்தப் படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. அதிலும் அண்ணன் விஜய்யின் பார்முலாவை தற்பொழுது பிரபல இயக்குனர் லோகேஷ் பின்பற்றி வருகிறார்.

தற்பொழுது இவர் இயக்கி வரும் படத்தில் தளபதி விஜய் உடன் அர்ஜுன், மிஸ்கின், த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். தற்பொழுது லியோ படத்தின் படப்பிடிப்பானது காஷ்மீரில் மிகவும் பரபரப்பாக கடும் குளிருக்கு மத்தியில் நடந்து வருகிறது. இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது.

Also Read: விஜய் மறுத்த அந்த 2 விஷயங்கள்.. லோகேஷ் மற்றும் லலித்தை தூக்கி வாரி போட்ட சம்பவம்

இந்நிலையில் தளபதி விஜய் பட்டினப்பாக்கத்தை அடுத்து தனது அலுவலகத்தை எந்த நடிகரும் வைத்திருக்காத அளவில் மிக பிரம்மாண்டமான முறையில் வைத்துள்ளார். அதிலும் பெரிய அப்பார்ட்மெண்டில் ஒரு பிளாட்டை வாங்கி அதில் தனது அலுவலகம் சார்ந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இதனைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் லியோ படத்தினை மிக பிரமாண்டமான முறையில் எடுத்து வருகிறார் இயக்குனர் லோகேஷ். இதனை அடுத்து இவர் தற்பொழுது இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் முதலிடத்தில் இருந்து வருகிறார். தற்பொழுது அதனை நிரூபிக்கும் விதமாக பணத்தை வாரி இரைத்து கொண்டு இருக்கிறார்.

Also Read: லோகேஷ் அசுர வளர்ச்சிக்கு இவர்தான் காரணம்.. அவங்க இல்லனா மாநகரம் படத்தோட கேரியர் க்ளோஸ் ஆயிருக்கும்

சினிமாவில் தனது கெத்தை நிரூபிக்க வேண்டும் என்று விஜய்க்கு போட்டியாக இவரும் ஒரு பிளாட்டை வாங்கி உள்ளார். தற்பொழுது கேகே நகரில் மிகப்பெரிய விலையை கொடுத்து அந்த ஃப்ளோரை தனக்கு சொந்தமாக்கியுள்ளார். இதுவரை எந்த ஒரு இயக்குனர்களும் இது மாதிரியான அலுவலகத்தை வைத்திருக்க முடியாது என்பதை  நிரூபிப்பதற்காகவே இது போன்ற வேலையை செய்துள்ளார்.

மேலும் இந்திய அளவில் அதிக ரசிகர் கூட்டத்தை தங்களின் படங்களின் மூலம் வைத்திருக்கும் பிரபலங்களாக இருக்கின்றனர். அதிலும் இவர்கள் அதிக சம்பளம் வாங்குவதிலும் முதலிடத்தில் இருந்து வருகின்றனர். இவ்வாறாக இப்படி போட்டி போட்டுக் கொண்டு பணத்தை செலவு செய்து தனது கெத்தை காண்பிக்கின்றனர். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் உடைய செயலானது சினிமா பிரபலங்களின் மத்தியில் வாயை பிளக்க வைத்துள்ளது.

Also Read: செம மாஸாக லியோ உடன் போஸ் கொடுத்த லோகேஷ்.. இணையத்தில் காட்டு தீயாக பரவும் புகைப்படம்

Trending News