சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

மொத்தமா மறந்து போன நடிகரை கூட்டிட்டு வரும் லோகேஷ்.. 10 படங்கள் கையில் இருந்தும் எட்டு வருட சோகம்

லோகேஷ் நாகராஜ் தோண்டி எடுத்து பழைய திறமை உள்ள நடிகர்களை மீண்டும் சினிமாவிற்கு கொண்டு வரும் இயக்குனர்களில் ஒருவர். அப்படி இவரால் செகண்ட் இன்னிங்சை சிறப்பாக ஆரம்பித்தவர்கள் பல பேர் உண்டு.

சார்லி, மன்சூர் அலிகான் போன்ற பழைய நடிகர்களை மீண்டும் தனது படங்கள் மூலம் செகண்ட் இன்னிங்ஸ்சை ஆடச்செய்தவர். இப்பொழுதும் தமிழ் சினிமா மறந்து போன நடிகர் ஒருவரை தன் படத்தில் நடிக்க வைத்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் ரெமோ படம் எடுத்த இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இவர் இப்பொழுது “பென்ஸ்” என்ற ஒரு படத்தை தமிழில் இயக்க உள்ளார். அந்தப் படத்தில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் தான் தயாரிக்கிறார்.

இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் மாதவன் நடிக்கவிருக்கிறார். அவர் கடைசியாக தமிழில் நடித்த படம் ராக்கெட்டரி. அந்தப்படமும் 2022 ஆம் ஆண்டு வெளிவந்தது. அதன் பிறகு தமிழில் எந்த படங்களும் நடிக்கவில்லை. எட்டு வருடங்களுக்கு முன்பு இறுதி சுற்று மற்றும் விக்ரம் வேதா ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தார்

2020 சைலன்ஸ் என்ற ஒரு திகில் படத்தில் நடித்தார் ஆனால் அந்த படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை. அதன் பிறகு ஹிந்தி பக்கம் சென்று விட்டார் இப்பொழுது அங்கே 10 படங்கள் கையில் வைத்திருக்கிறார். ஆனால் தமிழில் அவர் ஹிட்கொடுத்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.

8 ஆண்டு சோக நினைவுகளோடு மீண்டும் லோகேஷ் கனக ராஜின் பென்ஸ் படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு முக்கியமான கதாபாத்திரம் என கூறப்படுகிறது. ஆனால் நம்பத் தகுந்த வட்டாரங்கள் அவர் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக தெரிவித்து வருகின்றனர்.

Trending News