வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

விஜய்க்கே நோ சொல்லிட்டேன்.. சிவகார்த்திகேயன் மட்டும் என்ன? விஷால் எச்சரிக்கை

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக பிரபல நடிகர் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான பூமி, சைரன், அகிலன், இறைவன் படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. சில வருடங்களுக்கு முன்பு தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து டாப் ஹீரோக்களுக்கே டப் கொடுத்த ஜெயம்ரவிக்கு ஏன் இப்படி படங்களைத் தேர்வு செய்கிறார் என விமர்சகர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில் சமீபத்தில் தன் மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்து சினிமாத்துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இத்தனை ஆண்டுகள் கிளீன் இமேஜுடன் எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருக்கும் ஜெயம்ரவி அவர் படங்களை தாண்டி இவ்விவகாரத்தில்தான் அதிகளவில் பேசப்பட்டதாக நெட்டிசன்கள் கூறினர்.

இருப்பினும், சினிமாவில் கமிட் ஆன படங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. தீபாவளிக்கு ஜெயம்ரவி – எம் ரஜேஷ் கூட்டணில் வெளியான பிரதர் படம் ரூ.12 கோடிக்கு மேல் வசூலித்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கும் ஜெயம் ரவி!

இவர் நடிப்பில் தற்போது காதலிக்க நேரமில்லை, ஜெனி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், ஜெயம் ரவி சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகிறது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவா ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் வில்லனாக நடிக்க லோகேஷ் மறுத்த நிலையில், விஷாலை படக்குழு அணுகியதாகவும் அவரும் மறுப்பு சொல்லவே, நிவின் பாலியிடம் சென்றனர் அவர் இன்னும் எதுவும் கூறாத நிலையில் தற்போது ஜெயம் ரவியை படக்குழு அணுகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுவரை ஹீரோவாக மட்டுமே நடித்து வந்த ஜெயம்ரவி எப்படி இப்படத்தில் அதுவும் ஜுனியர் நடிகருக்கு வில்லனாக நடிப்பார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், வித்தியாசமான படங்களில் கவனம் செலுத்தி வரும் ஜெயம் ரவி, இப்படத்தில் வில்லனாக நடிக்கும் பட்சத்தில் ஒரு மாறுதலுக்காகவும் அவருக்கு ஒரு திருப்புமுனையாக இப்படம் அமையலாம், ரசிகர்களால் மீண்டும் பேசப்பட வாய்ப்பிருப்பதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

Trending News