சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

உங்க ஹீரோக்கு ஒரு நியாயம் உங்களுக்கு ஒரு நியாயமா.? இனிமேல் சர்ச்சைக்கு லோகேஷ் வைத்த முற்றுப்புள்ளி

Lokesh Kanagaraj: கடந்த சில நாட்களாகவே லோகேஷ் தான் சோசியல் மீடியா ட்ரெண்டிங் ஆக மாறி இருக்கிறார். அவருடைய புது அவதாரத்தை பார்த்து தான் அனைவரும் வாயடைத்து போய் இருக்கின்றனர்.

ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து லோகேஷ் இனிமேல் என்ற ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். ஏற்கனவே இது குறித்த செய்திகள் வந்தாலும் சமீபத்தில் வெளிவந்த டீசர் பிரளயத்தையே ஏற்படுத்தி விட்டது.

இதுவரை ஆக்சன் பாயாக இருந்த லோகேஷ் ரொமான்டிக் ஹீரோவாக பெரும் ஷாக் கொடுத்திருந்தார். அதிலும் ஸ்ருதியுடன் அவர் செய்த முரட்டு ரொமான்ஸை பார்த்து பல பேர் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிறார்கள்.

லோகேஷ் வைத்த முற்றுப்புள்ளி

இன்னும் சிலர் உங்க ஹீரோ லவ் பண்ணா அந்த பொண்ணு தலைய வெட்டிடுவீங்க. ஆனா நீங்க மட்டும் ரொமான்ஸ் பண்ணலாமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தற்போது லோகேஷ் ஒரு பேட்டியில் இதற்கு பதில் அளித்துள்ளார். அதன்படி ஆக்சன் படம் என்றால் அதற்கென ஒரு டெம்ப்ளேட் இருக்கிறது. அங்கு ரொமான்ஸை கொண்டு வர முடியாது.

எனக்கு ராஜ்கமல் நிறுவனத்தில் இருந்து போன் வந்தபோது முதலில் ஆச்சரியமாகத்தான் இருந்தது. அதன் பிறகு ஸ்ருதியுடன் பேசி தான் இதில் நடிக்க சம்மதித்தேன்.

அது மட்டுமல்லாமல் கமல் சார் கம்பெனியிலிருந்து ஒரு விஷயம் சொல்றாங்கன்னா அதை மறுக்கும் நிலையில் நான் இல்லை. சும்மா ட்ரை பண்ணலான்னு தான் இதில் நடித்தேன் என தெளிவுபடுத்தியுள்ளார்.

இதன் மூலம் அந்த போன் கால் தான் லோகேஷை தலையாட்ட வைத்திருக்கிறது என தெரிகிறது. மேலும் இது நாள் வரை இருந்த சர்ச்சையும் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

Trending News