வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

5 கோடி வாங்கியதால் பரிதவிக்கும் லோகேஷ்.. தலைவர் படத்துக்கு வந்த முட்டுக்கட்டை

Actor rajini: நெல்சன் இயக்கியுள்ள ஜெயிலர் படத்தை முடித்துள்ள சூப்பர் ஸ்டார் அடுத்ததாக ஜெய் பீம் ஞானவேல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கு இடையில் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் லால் சலாம் படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இது எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் ரஜினி, லோகேஷ் இயக்கத்தில் எப்போது நடிப்பார் என்ற ஆவல் தான் ரசிகர்களுக்கு அதிகமாக இருக்கிறது. தற்போது லியோ படத்தில் பிசியாக இருக்கும் லோகேஷ் சூப்பர் ஸ்டாருக்காகவும் கதையை தயார் செய்து வருகிறார்.

Also read: 28 வருடத்திற்கு முன்பே ரஜினிக்கு தேடிவந்த மிகப்பெரிய பதவி.. கால் தூசிக்கு சமம் என துச்சமாக நினைத்த காரணம்

ஆனால் இப்போது இந்த படம் ஆரம்பிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் மாஸ்டர் படத்தை இயக்கிக் கொண்டிருந்த சமயத்தில் தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் ஒருவர் லோகேஷை சந்தித்து படம் பண்ணுவதற்காக கேட்டிருக்கிறார்.

அதற்காக 5 கோடி அட்வான்ஸ் தொகையையும் கொடுத்து அவரை லாக் செய்திருக்கிறார். ஆனால் லோகேஷ் அவரை சிறிது காலம் காத்திருக்க சொன்னாராம். அதன்படி விக்ரம் படத்தை முடித்த அவர் இப்போது லியோ படத்தையும் முடிக்கப் போகிறார்.

Also read: ஒருவேளை சோறு கூட போடாத ரஜினி.. அவர் கூட விஜய்யை கம்பேர் பண்ணாதீங்க, சர்ச்சையை கிளப்பிய பிரபலம்

அதனால் அந்த தயாரிப்பாளர் மீண்டும் லோகேஷை தொடர்பு கொண்டு இப்பொழுது படம் பண்ணலாம் என்று அன்பு கட்டளை போட்டிருக்கிறாராம். சூப்பர் ஸ்டார் படத்தை ஆரம்பிக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் இந்த பிரச்சனை லோகேஷுக்கு புது சிக்கலாக அமைந்திருக்கிறது. மேலும் ஐந்து கோடி முன்பணமும் வாங்கி இருப்பது வேறு அவரை யோசிக்க வைக்கிறதாம்.

இதை தலைவரிடம் தொல்ல தயங்கும் லோகேஷ் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதை தான் பலரும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். தற்போது மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் லோகேஷ் 50 கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்திருக்கும் நிலையில் இந்த 5 கோடி பெரும் தலைவலியாக அமைந்திருக்கிறது. இதனால் சூப்பர் ஸ்டார் தான் கடும் அப்செட்டில் இருக்கிறார்.

Also read: நஷ்டத்தை சொல்ற மாதிரி லாபத்தையும் சொல்லுங்க.. மேடையில தில்லாக பேசிய ரஜினி

Trending News