புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஜெயிலர் வசூலை முந்தியே ஆகணும் எனக் கூறிய லலித்.. அசர வச்ச மாதிரி பதிலடி கொடுத்த லோகேஷ்

Leo-Lokesh: லியோ ரிலீஸ் தேதி நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் படம் பற்றிய ஒவ்வொரு செய்திகளும் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிக் கொண்டிருக்கிறது. அதிலும் லோகேஷ் தற்போது பல சேனல்களுக்கு பேட்டி கொடுத்து படத்தின் பிரமோஷனை அமோகமாக தொடங்கி வைத்துள்ளார்.

அது இப்போது மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் லியோ ஜெயிலர் வசூலை முந்த வேண்டும் என்ற பிரஷர் உங்களுக்கு கொடுக்கப்பட்டதா என்ற கேள்வி அவர் முன் வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த லோகேஷ் இன்று ஒரு படம் வசூலில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்கிறது என்றால் அடுத்த வாரமே வேறு ஒரு படம் அதை ஓவர் டேக் செய்துவிடும்.

Also read: வயிற்றெரிச்சலின் சம்பள பிரச்சனையை இழுத்து விட்ட டான்ஸர்கள்.. நாசுக்காக பதிலடி கொடுத்த லலித்

அதையெல்லாம் முந்தியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. அக்ரிமெண்ட்டில் சைன் பண்ணும் போது கூட இதைப் பற்றி எல்லாம் பேசுவது கிடையாது என்று ரொம்பவும் கூலாக சொல்லி இருக்கிறார். அதை தொடர்ந்து மற்றொரு விஷயத்தையும் அவர் வெளிப்படையாக போட்டு உடைத்து இருக்கிறார்.

அதாவது லியோ தயாரிப்பாளர் லலித் லோகேஷிடம் ஜெயிலர் வசூலை நாம் முறியடிப்போம் என்று மீம்ஸ் வருகிறது. இதையெல்லாம் பார்த்துக்கோங்க என்று கூறினாராம். உடனே இதற்கெல்லாம் அசருபவனா நான் என்ற ரீதியில் அவர் நீங்க எனக்கு ஹெலிகாப்டர் வாங்கிக் கொடுப்பது போன்ற ஒரு மீம்ஸ் கூட நான் பார்த்தேன் சார் அதையும் நீங்க மனசுல வச்சுக்கோங்க என்று கூறினாராம்.

Also read: கேப்பே இல்லாமல் அடுத்தடுத்து ரெடியாகும் 5 படங்கள்.. ராஜமவுலி அளவுக்கு தெளிவா ஸ்கெட்ச் போடும் லோகேஷ்

இதை தற்போது விளையாட்டாக அவர் கூறியிருந்தாலும் தயாரிப்பு தரப்பில் இருந்து லோகேஷிற்கு இது போன்ற ஒரு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது வெட்ட வெளிச்சம் ஆகி உள்ளது. ஏற்கனவே பட குழுவிற்குள் மனக்கசப்பு இருந்ததாக பல செய்திகள் உலா வந்தது.

தற்போது லோகேஷ் கூறியிருக்கும் விஷயத்தை பார்க்கும்போது அது உண்மைதானோ எனவும் யோசிக்க வைக்கிறது. எது எப்படி இருந்தாலும் லியோ வசூலை ஒட்டுமொத்த திரையுலகமும் எதிர்பார்த்து வருகிறது என்பதே நிதர்சனம். ஆக மொத்தம் லோகேஷ் முந்தைய சாதனையை முறியடிப்பாரா என வெகுவிரைவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

Also read: கமல், சூர்யா லியோல இருக்காங்களா.? லோகேஷ் கூறிய ட்விஸ்ட்டான பதில்

Trending News