திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

இரும்பு கை மாயாவி படத்தின் அப்டேட்டை கொடுத்த லோகேஷ்.. ரஜினிக்கு அடுத்து சம்பவம் செய்ய போகும் சூர்யா

Lokesh gave the update of irumpu Kai Mayavi: தமிழ் சினிமாவின் வான்டட் இயக்குனர் லிஸ்டில் லோகேஷ் இடம்பெற்றிருக்கிறார். விஜய் மற்றும் கமல் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து வெளிவந்த படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரி குவித்திருக்கிறது. அத்துடன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்த கைதி படமும் ரசிகர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இரண்டாம் பாகத்திற்கு காத்துக் கொண்டிருக்கும் அளவிற்கு பல சஸ்பென்சிகளை வைத்து எடுத்திருக்கிறார்.

இதனை அடுத்து தற்போது ரஜினியின் 171 ஆவது படத்திற்கான கதையை எழுதும் வகையில் ரொம்பவே பிஸியாக இருக்கிறார். மேலும் இதற்கு முதற்கட்ட பணியாக இப்படத்தின் வில்லனை தேர்வு செய்யும் வகையில் ராகவாவை கமிட் பண்ணி விட்டார். அத்துடன் ரஜினியும் வேட்டையன் படப்பிடிப்பை மார்ச் இறுதிக்குள் முடித்துவிட்டு ஏப்ரல், மே மாதங்களில் லோகேஷ் உடன் கூட்டணி வைக்கப் போகிறார்.

இதனை அடுத்து லோகேஷ் நேற்று சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கான காமிக்கான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் பத்திரிகையாளர்கள் லியோ 2 சாத்தியமாகுமா என்று கேட்டிருக்கிறார். அதற்கு லோகேஷ், விஜய் தற்போது அவருடைய இலட்சியத்திற்காக அடுத்த கட்ட லெவலில் இறங்கி இருக்கிறார். அதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Also read: சிவகார்த்திகேயன் ஆசையில் விழுந்த மண்.. ரஜினிக்கு வில்லனாக சிஷ்யனை லாக் செய்த லோகேஷ்

விஜய் என்னை அழைத்து லியோ 2 படத்தை பண்ணலாமா என்று கேட்டால் நிச்சயமாக பண்ணுவதற்கு வாய்ப்பு உண்டு என்று கூறியிருக்கிறார். அடுத்ததாக பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வி என்னவென்றால் சூர்யாவின் இரும்பு கை மாயாவி படத்தை பற்றி தான். அதற்கு லோகேஷ் அளித்த பதில் முதல் படத்தை ஆரம்பிப்பதற்கு முன் ஒரு கனவு படமாக இரும்பு கை மாயாவின் கதை இருந்தது.

ஆனால் என்னுடைய முதல் படத்தை தொடர்ந்து இப்பொழுது என்னுடைய ட்ராக் கொஞ்சம் மாறிவிட்டது. அதனால் கிட்டத்தட்ட தற்போது ஆறு படத்தை முடித்து இருக்கிறேன். இன்னும் 4 படங்களை முடித்த பின்பு என்னுடைய கனவு லட்சியமான இரும்புக் கை மாயாவி படத்தை எடுப்பேன். ஏனென்றால் இதற்கு ரொம்பவே ரிலாக்ஸேசன் ஆகவும் பொறுமையுடனும் பண்ண வேண்டும்.

அந்த வகையில் என்னுடைய பத்தாவது படத்தை முடித்த பிறகு இரும்பு கை மாயாவின் படம் தொடங்கும் என்று கூறியிருக்கிறார். மேலும் கிட்டத்தட்ட இரண்டு மூன்று வருடங்கள் ஆனாலும் லோகேஷ் உடன் சூர்யா ஒரு தரமான சம்பவத்தை செய்யப் போகிறார் என்பது உறுதியாகிவிட்டது. அந்த வகையில் விஜய், ரஜினி, கமல் மற்றும் கார்த்தி போன்ற உச்ச நட்சத்திரங்களை தொடர்ந்து சூர்யாவும் கூடிய விரைவில் சம்பவம் செய்யப் போகிறார்.

Also read: ஸ்ருதிஹாசன் உடன் லோகேஷ் செய்யப் போகும் தரமான சம்பவம்.. ஆண்டவர் கிட்டயே ஆசீர்வாதம் வாங்கியாச்சு

Trending News