ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

உச்சகட்ட சர்ப்ரைஸில் ஆழ்த்தும் லோகேஷ்.. 21 வருடங்களுக்கு பின் தளபதி 67ல் இணையும் ஹீரோ

விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய்யை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார். ஏற்கனவே இது குறித்த அறிவிப்பு வந்த நிலையில் வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் இந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாக இருக்கிறது. அதற்கான அனைத்து வேலைகளும் தற்போது பரபரப்பாக செய்யப்பட்டு வருகிறது.

வாரிசு திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் விஜய் விரைவில் அந்த படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் உடன் இணைய இருக்கிறார். சூட்டிங் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், பிரிதிவிராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்க இருக்கின்றனர்.

Also read:ரகசியமாய் காய் நகர்த்தும் லோகேஷ் கனகராஜ்.. விஜய்க்கே தெரியாமல் செய்யும் தில்லாலங்கடி வேலை

அந்த வரிசையில் தற்போது சூர்யாவும் இணைந்துள்ளார். இது பலருக்கும் புதிய தகவலாக இருக்கிறது. விக்ரம் திரைப்படத்தில் நடித்த அதே ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தான் அவர் இந்த படத்தில் நடிக்க இருக்கிறாராம். கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் லாபம் பார்த்தது.

அதில் கமலின் நடிப்பு எந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்ததோ அதே அளவுக்கு கிளைமாக்ஸ் காட்சியில் சில நிமிடங்கள் மட்டுமே வந்த சூர்யாவின் நடிப்பும் வரவேற்பை பெற்றது. ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் படு மிரட்டலாக நடித்திருந்த அவருடைய நடிப்பு இப்போது வரை ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாகவே இருக்கிறது.

Also read:பல பிரச்சனைகளை சந்தித்த சூப்பர் ஹிட் திரைப்படம்.. இரண்டாம் பாகத்தை எடுக்கத் துணிந்த சூர்யா

அதனால் விக்ரம் படத்தின் அடுத்த பாகம் எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் பலரையும் மிரட்டிய அந்த ரோலக்ஸ் கதாபாத்திரம் விஜய் 67 திரைப்படத்தில் வர இருப்பது அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. அப்படி என்றால் இந்த படமும் ஒரு கேங்ஸ்டர் திரைப்படமா என்ற ரீதியில் பேசப்பட்டு வருகிறது.

மேலும் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக சூர்யாவிடம் தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். ஏற்கனவே இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தனுஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இப்படி ஒரு செய்தி வந்துள்ளதால் எது உண்மை என்று விரைவில் தெரியவரும். சூர்யா, விஜய்யுடன் கடைசியாக சேர்ந்து நடித்த படம் பிரண்ட்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Also read:விஜய்க்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா.? சிவகார்த்திகேயன் நீங்க இன்னும் வளரணும் தம்பி!

Trending News