Lokesh: லோகேஷ் இப்போது கூலி பட சூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். இன்னும் 10 நாட்களில் இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிடும்.
அதை அடுத்து இறுதி கட்ட பணிகள் 2,3 மாதங்கள் வரை நடக்கும் என்கின்றனர். ஏனென்றால் ஷூட்டிங்கை விட லோகேஷ் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளில் தான் அதிக தீவிரம் காட்டுவார்.
அதனால் கோடை விடுமுறைக்கு வரும் என எதிர்பார்த்த கூலி ஆகஸ்ட் மாதம் வெளிவரும் என தெரிகிறது. ஆனால் லேட்டா வந்தாலும் தரமான சம்பவம் செய்ய காத்திருக்கிறது இப்படம்.
பான் இந்தியா படமாக உருவாகும் இதில் நாகார்ஜுனா, உபேந்திரா, அமீர்கான் என எதிர்பார்க்காத பிரபலங்கள் இணைந்துள்ளனர். இதில் அமீர்கான் ரோல் படு சீக்ரெட்டாக இருக்கிறது.
விட்டதை பிடிக்கும் வெறியில் லோகேஷ்
இது ஒரு பக்கம் இருக்க கூலி நிச்சயம் 1000 கோடியை தட்டி தூக்கும் என வர்த்தக ரீதியாக சொல்லப்பட்டு வருகிறது. ஏற்கனவே லியோ, கங்குவா இந்த லிஸ்டில் இருந்தது.
ஆனால் அந்த சாதனையை இன்னும் எந்த படமும் செய்யவில்லை. உண்மையில் லோகேஷ் லியோ படத்தில் இப்படி ஒரு ரெக்கார்ட் செய்ய ஆசைப்பட்டார்.
அது நிறைவேறாத நிலையில் விட்டதை பிடிக்க கூலியில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அது மட்டும் இன்றி அவர் கையில் இருப்பது சூப்பர் ஸ்டார் என்கிற தங்க முட்டை இடும் வாத்து.
அதனாலேயே பொறுப்பும் கூடுதலாக இருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனமும் தாராளமாக செலவு செய்திருக்கின்றனர். ஜூன் மாதத்தில் அடுத்தடுத்த ப்ரமோஷன்கள் ஆரம்பித்து விடும்.
அதேபோல் டீசர், ட்ரெய்லர் என அப்டேட்டுகளும் வந்து கொண்டிருக்கிறது. ஆக மொத்தம் கோலிவுட்டின் முதல் 1000 கோடி படம் என்ற சாதனையை கூலி செய்யுமா என பார்ப்போம்.