வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஜவ்வாய் இழுத்த 2ம் பாதி.. இந்த ரெண்டு பேரால சண்டையில சட்டை கிழிஞ்சது லோகேஷுக்கு தான்!

Leo Movie: பெரும் எதிர்பார்ப்புகள் மத்தியில் லியோ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தாலும் சோசியல் மீடியாவில் நெகட்டிவ் கமெண்ட்களும் குவிகிறது. அதிலும் படத்தின் இரண்டாம் பாதியை ஜவ்வாய் இழுத்துவிட்டனர். லியோ படத்தில் விஜய் நடித்திருக்கிறார் என தளபதி ரசிகர்கள் பார்ப்பதற்கு திரையரங்குகளில் குவிந்தாலும், இது லோகேஷின் படம் என்றும் மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்தனர்.

ஆனால் அவர் இதற்கு முன்பு எடுத்த கைதி, விக்ரம் படம் அளவுக்கு லியோ இல்லை என்று சலித்து விட்டனர். இதற்கு காரணம் முதல் பாதி எந்த அளவிற்கு வேகமாக போகிறதோ அதே அளவிற்கு இரண்டாம் பாதியும் சென்றால் தான் அந்த படத்திற்கு வெற்றி இருக்கும். ஆனால் 2ம் பாதியை ஜவ்வு மிட்டாய் போல் இழுத்து விட்டனர்.

சொல்லப்போனால் முதல் பாதி மட்டும் தான் லோகேஷின் படம், 2ம் பாதி ஆரம்பிக்கும் போதே படப்பிடிப்பு தளத்தில் லோகேஷுக்கும் விஜய்க்கும் முட்டிக்கொண்டது. இந்த படத்தில் விஜய்- திரிஷா இருவருக்கும் லிப்லாக் சீன் இருக்கும். இந்த காட்சியை தளபதி தான் அடம் பிடித்து வைக்க சொல்லி இருக்கிறார். இதில் லோகேஷுக்கு கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை. இந்த விஷயத்தில் தான் தளபதிக்கும் லோகேஷுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது.

லியோ படத்தின் இரண்டாம் பாதியை லோகேஷ் இயக்கவில்லை. அவருடைய அசிஸ்டன்ட் ரத்ன குமார் தான் இயக்கினார். அதனால் தான் முதல் பாதிக்கும் இரண்டாம் பாதிக்கும் நிறைய வேறுபாடு இருந்திருக்கிறது. லோகேஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் ப்ரோபைல் பேஜில் லியோ படத்தை முதலில் சேர்த்தார். அதன்பின் நீக்கினார், மறுபடியும் அந்த படம் ரிலீஸ் ஆகும் சமயத்தில் சேர்த்துக் கொண்டார். இப்போதுதான் அதற்கான காரணமும் தெரிகிறது.

லோகேஷ் லியோ படத்தின் இரண்டாம் பாதி அவருடைய அசிஸ்டன்ட் ரத்ன குமாரை இயக்கச் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். ரத்ன குமாராவது லோகேஷ் நினைத்த மாதிரி படத்தை எடுத்திருக்கலாம். செகண்ட் ஆப்-இல் 40 நிமிஷம் சண்டை காட்சிகள் தான் நிரம்பியது. இதனை ஸ்டண்ட் இயக்குனர்களான இரட்டையர்கள் அன்பறிவ் தான் எடுத்தனர்.

அதனால்தான் பல பேருக்கு லியோ படத்தின் இரண்டாம் பாதி சுத்தமாகவே பிடிக்கல. கடைசில என்னமோ லியோவில் விஜய் மாஸ் காட்டிவிட்டார், ஆனால் இவங்க ரெண்டு பேருக்கு சண்டையில சட்டை கிழிஞ்சது லோகேஷுக்கு தான். லியோ லோகேஷின் LUC படம் என்ற எதிர்பார்ப்புடன் வந்தவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது.

Trending News